நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.
முதன்முதலாக கேமரா முன் நின்றபோது சினிமாதான் தன்னுடைய வாழ்க்கையாக மாறப்போகிறது என்பதைத் தாம் அறவே உணர்ந்திருக்கவில்லை என்று தனது இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“நான் நடித்த ஒவ்வொரு காட்சியும் என்னை நல்ல நடிகையாக செதுக்கியுள்ளது. எனவே, சினிமாவுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்,” என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துவந்த இவர், ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியிலும் கால்பதித்தார்.
தற்போது நடிகர் கவினுடன் ‘ஹாய்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் கன்னட நடிகை ஒருவர் நடித்த படத்தின் தலைப்பில் அவரது பெயருக்கு முன்னால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பினாலும் பதிலளிக்காமல் ஒதுங்கி நிற்கிறார் நயன்தாரா.