தனது பெயரில் போலி கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி, யாரோ ஒருவர் ஆதாயம் பெறுவதாகவும் அவரிடம் யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் நடிகை ருக்மினி வசந்த் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“ஒரு கைப்பேசி எண்ணைக் குறிப்பிட்டுத் தொடர்புகொள்ளும் அவர், என்னைப் போலவே பேசி மக்களை ஏமாற்றுகிறார்.
“எனவே, எனக்கு சற்றும் தொடர்பு இல்லாத அந்தக் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி வரும் அழைப்புகளையும் கிடைக்கும் பொய்யான தகவல்களையும் நம்பி பதிலளிக்கவோ தொடர்புகொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
“காவல்துறை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்று ருக்மினி வசந்த் மேலும் கூறியுள்ளார்.

