அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்துவிட்டது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியை அடுத்து, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார் அஜித்.
இதையடுத்து, அஜித்துக்காக இம்முறை எத்தகைய கதையை உருவாக்கி இருக்கிறீர்கள்? என நேரிலும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் ரசிகர்கள் தொடர்ந்து அவரை நச்சரித்து வருகிறார்கள்.
தற்போது சின்ன குறிப்பை மட்டும் கூறியுள்ளார் ஆதிக். ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி உள்ளாராம்.
“முந்திய படம் முழுவதும் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. இம்முறை அஜித்தை ஒரு புதிய கோணத்தில் காண்பிக்கப் போகிறேன்.
“எனினும், அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும்,” என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இது அஜித்தின் 64வது படமாகும். அநேகமாக அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின்போது இப்படத்தை வெளியிடத் தயாரிப்புத்தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

