ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘தேரே இஷ்க் மே’.
கிரித்தி சனோன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
காதல் கதையான இதில், தனுஷ் விமானப்படை அதிகாரியாக நடிக்கிறாராம். கதைப்படி அவரது பெயர் சங்கர் என்றும் பெரும்பாலான காட்சிகள் டெல்லியில் உள்ள கல்லூரியில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
அதில், விமானப்படை அதிகாரிக்குரிய தோற்றத்தில் காணப்படுகிறார் தனுஷ்.

