பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த இணையருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அப்பிள்ளைக்கு துவா எனப் பெயரிட்டனர். துவாவைச் சமூக ஊடகங்களிலிருந்து சற்று தள்ளியே வைத்திருந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமானநிலையத்தில் தீபிகாவுடன் துவா இருக்கும் காணொளி பரவலானது. அப்போது தன் மகளைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று தீபிகா ரசிகரிடம் கேட்டிருந்தார்.
இந்நிலையில், இதுவரை துவாவின் முகத்தை வெளியிடாமல் வைத்திருந்த அத்தம்பதி, இப்போது முதன்முறையாகத் தீபாவளிக்குத் தங்கள் மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர்.
அந்தப் புகைப்படத்தைப் பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக்கி வருகின்றனர்.

