‘புஷ்பா 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமானார் தீபிகா படுகோன். அவரும் அல்லு அர்ஜுனும் இணைந்து நடிக்கும் காட்சிகளை முன்பே படமாக்கிவிட்டனர். பெரும்பாலான காட்சிகளை மும்பையிலும் ஹைதராபாத்திலும் எடுத்துள்ளனர்.
இந்தப் படத்தில் திடீரென மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளார். இவருக்கான காட்சிகளும் மும்பையில்தான் படமாக்கப்படுகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு அமெரிக்கா அல்லது லண்டனில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயம் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் படமாக்கப்பட உள்ளன.


