தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கக் கடத்தலை கதைக்களமாகக் கொண்ட ‘கூலி’

1 mins read
e4d195d9-66e6-4ede-ad9b-0dcb6f6e2da6
‘கூலி’ படத்தில் ரஜினியின் தோற்றம். - படம்: ஊடகம்

ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘கூலி’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

கமலுக்குத் திருப்புமுனை தந்த ‘விக்ரம்’ படத்திலும் கார்த்தியின் ‘கைதி’ படத்திலும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தைக் கையில் எடுத்த இயக்குநர் லோகேஷ், ரஜினியின் ‘கூலி’ படத்தில் தங்கக் கடத்தல் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாராம்.

கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்படுகிறது.

குறிப்பாக தென்னிந்தியாவில் திருச்சி, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூலம்தான் அதிக அளவிலான தங்கம் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு தங்கம் கடத்தும் கும்பலுக்கும் ரஜினிக்கும் இடையேயான போராட்டம்தான் ‘கூலி’ படத்தின் கதை என்று ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது.

குறிப்புச் சொற்கள்