நிதிஷ் திவாரி இயக்கத்தில், இந்தியில் உருவாகிறது ‘ராமாயணா’ திரைப்படம்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில், சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு இணையத்தில் வெளியான இரண்டு நாள்களில் ஆறு மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.
இந்தக் காணொளியை சாய் பல்லவி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “சீதையின் ஆசிர்வாதத்துடன் அவரது தெய்வீகத் தன்மையால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோடிகளுடன் சேர்ந்து, ராமாயணக் காப்பியத்தை மீண்டும் உருவாக்க, அவரது பயணத்தைத் திரையில் நான் ஏற்றுள்ளேன்.
“இதுபோன்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவுடன் நான் அடைய முயற்சி செய்யும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை,” எனப் பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி.
அவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், “இந்தி நடிகைகளுக்கும் கிடைக்காத அருமையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருப்பது பெரிய ஆசிர்வாதம்தான்.
“தென்னிந்திய நடிகைகள் யாருக்கும் இப்படியோர் வாய்ப்பு அமைந்ததில்லை,” என்று குறிப்பிட்டு, சாய் பல்லவியைப் பாராட்டி உள்ளனர்.