தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷாலினி பிறந்தநாளில் மறுவெளியீடு காணும் ‘அமர்க்களம்’

1 mins read
c05cb4fb-849e-44f4-8c94-d6fd4b7b49a5
‘அமர்க்களம்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களும் பழைய தயாரிப்பு நிறுவனத்தாரும் தற்போது பழைய படங்களை மறுவெளியீடு செய்வதில் கவனம் செலுத்துகின்றனர்.

புதுப் படங்களை வெளியிடுவதைவிட, பழைய படங்களை மறுவெளியீடு செய்யும்போது பொருளியல் ரீதியில் பாதுகாப்பாக உணர்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் வெளியான விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆறு நாள்களில் ரூ.5 கோடி வசூல் கண்டுள்ளது.

ரசிகர்கள் குடும்பத்துடன் திரண்டுவந்து படம் பார்த்துச் செல்வதால் விஜயகாந்த் குடும்பத்தாரும் படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அஜித், ஷாலினி இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ படமும் எதிர்வரும் நவம்பர் மாதம் மறுவெளியீடு காண்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித், ஷாலினி இடையே காதல் மலர்ந்தது.

‘அமர்க்களம்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. மேலும், நவம்பர் 20ஆம் தேதி ஷாலினியின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் படத்தை மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை மறுவெளியீடு செய்த கார்த்திக் வெங்கடேசன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்