நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. அதில், கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருந்த நிலையில், படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதைத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது.
தயாரிப்புத் தரப்புக்கும் தீபிகா படுகோனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அவர் இடத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை என்றாலும் அந்த வேடத்தில் நடிக்க ஆலியா பட்டுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
விரைவில் அதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.