அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது ஆதிக் ரவிச்சந்திரன்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, அஜித்துக்கு ஊதியமாக ரூ.180 கோடியும் ஆதிக்குக்கு ரூ.12 கோடியும் வழங்கப்படுவதாகத் தகவல்.
மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான ஊதியம், படப்பிடிப்புச் செலவுகள் என மொத்தமாக ரூ.275 கோடிக்குள் படத்தின் முதல் பிரதி தயாராகிவிடும் என்று இயக்குநர் தரப்பில் இருந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், அண்மை காலமாக பெரிய பட்ஜெட் படங்களின் வசூல் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதும் ‘தக் லைஃப்’ படத்துக்கு ஏற்பட்ட நிலைமை மற்ற தயாரிப்பாளர்களைக் கவலைப்பட வைத்துள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இதனால் தயாரிப்புச்செலவை மேலும் குறைக்க முடியுமா என்று ஆதிக்கிடம் கேட்டுள்ளாராம் ஐசரி கணேஷ்.
ஆனால், ஆதிக் அளிக்கும் பதில் என்னவாக இருந்தாலும், இந்தப் படம் திட்டமிட்டபடித் தொடங்கும் என்பதே இறுதிக்கட்டத் தகவல்.