நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை நகரின் சாலையோரமாக அமர்ந்து இருந்தவர்களுக்கும் படுத்துறங்கியவர்களுக்கும் போர்வைகளை வழங்கினார். ஒரு சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்களை எழுப்பிவிடாமல் அப்படியே அவர்கள்மீது போர்வையைப் போர்த்திவிட்டுச் சென்றார்.
இதுகுறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ள அவர் “தலைநகர் சென்னையின் சாலையோரம் இரவு நேரத்தில் நடந்து சென்றேன். அப்போது, சாலையோரமாகப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் குளிரில் நடுங்கிக் கொண்டும் கொசுக்களோடு போராடிக் கொண்டும் இருந்தனர். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்காக இந்தப் போர்வைகளை வாங்கி வந்து கொடுத்தேன்,” என்று கூறியுள்ளார்.

