தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கட்டா குஸ்தி-2’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி

1 mins read
fc7ebd0d-53be-43be-8df1-5133ed4e12af
ஐஸ்வர்யா லட்சுமி. - படம்: ஊடகம்

‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா லட்சுமிதான் நாயகியாக நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

முதல் பாகத்தில் விஷ்ணு விஷாலும் இவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.

படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகக்கூடும் எனத் தகவல். படமும்கூட அடுத்த ஆண்டுதான் வெளியாகுமாம்.

எனவே, ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் நடிப்பாரா எனும் சந்தேகம் எழுந்தது. எனினும், அவர் நடிப்பது உறுதி என படத்தின் இயக்குநர் வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்