இந்தி நடிகை கஜோல், திருமணத்துக்குப் பிறகும், முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
தற்போது விஷால் பியூரியா இயக்கும் ‘மா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தனது வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.
காஜோலைப் பொறுத்தவரை, ஒரேயடியாக நான்கைந்து படங்களில் கவனம் செலுத்த மாட்டாராம். ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதைக் கொள்கையாக வைத்துள்ளார்.
“மற்ற சில நடிகைகளைப் போல் தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் நான் ஏற்பதில்லை. பணம் மட்டுமே முக்கியம் என நினைத்தால் தரம் போய்விடும். அதனால்தான் ஒரு படம் முடிந்த பிறகே, அடுத்த படத்தைத் தொடங்குகிறேன்.
“அதேபோல் தொடக்கம் முதலே 20, 30 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றியதாக நான் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. நாள்தோறும் குறிப்பிட்ட காலம் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்,” என்கிறார் கஜோல்.
ஜோதிகாவின் கணவர் சூர்யா சொந்த நிறுவனங்களின் மூலம் படங்களைத் தயாரித்து உதவுகிறாரோ, அதேபோல் கஜோலுக்கும் அவரது கணவரும் நடிகருமான அஜய் தேவ்கன்னும் உதவி வருகிறார்.