நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்

1 mins read
256ce2d9-8dbd-432c-a29c-3cd4185257e9
கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் ஜூலை 13ஆம் தேதி காலை காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர். - படம்: ஊடகம்

பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83.

உடல்நலக்குறைவால் ஜூலை 13ஆம் தேதி காலை அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஏராளமான தெலுங்குப் படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த 1942ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பிறந்த அவர், 2003ஆம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ‘திருப்பாச்சி’, ‘குத்து’, ‘ஏய்’, ‘கோ’, ‘சகுனி’ உள்ளிட்ட பல படங்களில் இவரது வில்லத்தனமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பல்வேறு முகங்களைக் கொண்ட கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ஏறக்குறைய 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக 2023ஆம் ஆண்டு சுவர்ண சுந்தரி என்ற படம் வெளியானது.

அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.

அவர், கடந்த 1999 - 2004ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்