முன்னணி நடிகர் அஜித்குமாரின் புதிய தோற்றத்தைக் காட்டும் படங்கள் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
அந்தப் படங்களில் மொட்டைத் தலையுடன் அவர் காணப்படுகிறார்.
கார், மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் அஜித்துக்கு ஈடுபாடு இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஐரோப்பியப் பந்தயத் தொடருக்காகத் தற்போது அவர் பெல்ஜியத்தில் உள்ளார். தொடரின் மூன்றாவது சுற்றில் பங்கேற்க அவர் தயாராகிவருகிறார்.
அவரது புதிய தோற்றத்தைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகின்றன. இந்தச் சிகை அலங்காரம் பொதுவாக ‘பேபி கட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது.
மொட்டைத் தலையுடனான தோற்றத்தை அஜித் தனது அடுத்த படத்தில் கொண்டு வரலாம் என்று நம்பப்படுகிறது.
அஜித் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். மீண்டும் ஆதிக் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
திரைப்படத் துறையிலும் பந்தயங்களிலும் ஒருசேரப் பங்கேற்று வரும் அஜித், எப்போதுமே தனது ஒவ்வோர் அசைவாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.
ஒவ்வொரு முறையும் அவரது புகைப்படமோ காணொளியோ வெளியாகும்போதெல்லாம் அதில் வேறுபட்ட தோற்றத்தில் அவர் காணப்படுவதுண்டு.
‘தல’ என்றும் ‘ஏகே’ என்றும் அவரை அன்புடன் அழைக்கும் ரசிகர்களிடையே, அவரது புதிய சிகை அலங்காரம் அடுத்த படத்தின் (ஏகே64) அறிவிப்புக்கான முன்னோட்டமா, பந்தயப் பயிற்சிக்கான தோற்றம் மட்டுந்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.