தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தைப் பார்த்து கண்கலங்கிய அமீர்கான்: விஷ்ணு விஷால்

1 mins read
2eccdd50-c4fa-4b69-a672-b3a16a6a98f2
விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்

சென்னையில் ‘ஒஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் விளம்பர விழா நடைபெற்றது. இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவரது ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கார் நடித்துள்ளார்.

விழாவில் பேசிய விஷ்ணு விஷால், தன் தம்பியின் படத்தைப் பார்த்து அமீர்கான் கண்கலங்கியதாகத் தெரிவித்தார். தனது தயாரிப்பில் ‘ராட்சசன் 2’, ‘கட்டா குஸ்தி 2’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்