நயன்தாரா படப்பிடிப்புக்கு வரும்போது தனக்கு பாதுகாப்பாக வருபவர்களுக்கு ரூ.30 லட்சம் தயாரிப்பாளரைத் தரச் சொல்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், “நயன்தாரா பற்றிய ஒருசில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், நயன்தாராவுடன் படப்பிடிப்பிற்கு நிறைய பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக சிலர் வருகிறார்கள்.
“இவர்களுக்கு செலவு மட்டுமே ரூ.30 லட்சத்திற்கும் மேலாகிறது. இதற்கும் தயாரிப்பு நிறுவனம்தான் செலவு செய்கிறது. அப்படிச் செலவு செய்து நயன்தாராவை வைத்து எடுக்கும் படங்கள் சரியாக ஓடுவதில்லை.
“அதனால்தான் தற்பொழுது நயன்தாராவிற்குப் பதிலாக மற்ற நடிகைகளைத் தேர்வு செய்கிறார்கள்.
“ஈ’ படத்தின்போது நயன்தாரா ஒருவருடன் பழகி வந்தார். எந்நேரமும் அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்ததால் படப்பிடிப்பிற்கு தாமதமானது. இதனால் கோபமான தயாரிப்பாளர் நயன்தாராவை கூப்பிட்டு நேரடியாகத் திட்டினார். அதன்பின் நயன்தாரா நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து படத்தை நடித்து முடித்தார்.
“அண்மைக்காலமாக நயன்தாரா சொல்லும் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் செய்யத் தொடங்கியதால் தற்பொழுது எல்லைமீறி நடந்து கொள்கிறார் நயன்தாரா.
“அவருக்கு பாதுகாப்பாக வருபவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்களே அவரை ஒதுக்கி மற்ற நடிகைகள் பக்கம் செல்கிறார்கள்,” என்று அந்தணன் தெரிவித்துள்ளார்