கார் பந்தயப் பிரியரான அஜித் குமார் தற்பொழுது பந்தயங்களில் தனக்கு முன்மாதிரியாக விளங்கும் அயர்டன் சென்னா நினைவாக ரூ.15 கோடியில் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
அஜித்திடம் பல புதிய ரக கார்கள் உள்ளன. இருந்தாலும் தற்போது மெக்லாரன் சென்னா என்ற காரை வாங்கி இருக்கிறார். இந்த கார் அஜித்தின் முன்மாதிரியாக விளங்கும் அயர்டன் சென்னாவின் நினைவாக உருவாக்கப்பட்டது.
15 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரை உலக அளவில் 500 பேர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அந்தப் பட்டியலில் தற்போது அஜித் குமாரும் இணைந்துள்ளார்.
அஜித்தின் ரோல் மாடலான இந்த அயர்டன் சென்னா கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானார். சமீபத்தில் அவரது சிலையை பார்வையிட்ட அஜித், அவரது கால்களில் முத்தமிட்ட காணொளியும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

