கி.விஜயலட்சுமி
பிள்ளைகளே! நாம் கழிவு என நினைத்துக் குப்பையில் தூக்கி எறியும் பொருள்களிலிருந்துகூட அழகிய கைவினைப் பொருள்களை செய்யலாம்.
இவ்வாரம், பழ மெத்துறையைப் பயன்படுத்தி அழகிய ‘ஸ்ட்ராபெர்ரி’ பழ பொம்மை செய்வது குறித்து அறிந்துகொள்ளலாம்.
தேவையானப் பொருள்கள்:
1. சிகப்பு நிறப் பழ மெத்துறைகள் 2. பச்சை வண்ணக் காகிதம் 3. காகிதம் வெட்டும் கத்தரிக்கோல் 4. பசை (glue) 5. நூல் அல்லது ‘ரப்பர் பேண்ட்’
செய்முறை
முதலில், பழ மெத்துறையைப் பாதியாக வெட்டிக்கொள்ளவும். அதன் ஒரு பாதியைப் படம் இரண்டில் காட்டியிருப்பதைப் போன்று முக்கோண வடிவில் (triangle shape) வெட்டவும்.
வெட்டப்பட்ட வடிவங்களின் முனையை ஒன்றிணைத்து நூல் அல்லது ‘ரப்பர் பேண்ட்’ (Rubber Band) போட்டுக் கட்டவும்.
பழ மெத்துறையை உட்புறமாகத் திருப்பி, உருண்டைபோல் ஆக்கவும்.
திறந்திருக்கும் மற்றொரு பகுதியைப் பசையால் (glue) ஒட்டவும்.
தொடர்புடைய செய்திகள்
பச்சை வண்ணக் காகித்தை இலை வடிவத்தில் வெட்டி, வட்டமாக இருக்கும் பகுதியின்மீது ஒட்டவும். அதே காகிதத்தில் மெல்லிய குச்சிபோல் செய்து இலையின்மீது ஒட்டவும்.
இதோ, ‘ஸ்ட்ராபெர்ரி’ கைவினைப்பொருள் தயார்!!
குறிப்பு: கத்தரியைப் பயன்படுத்தும்போது பெரியோரின் உதவியை நாடுவது அவசியம்.


