தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகள்

1 mins read
3eaadbe1-3f96-46c3-b957-28653ae4a02f
போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள். - படம்: தேவி மணிகண்டன், Indian.SG 

சிங்கப்பூர் மீதான நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் இணைக்கும் ஒரு தளமாக தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகளை Indian.SG (இந்தியன்.எஸ்ஜி) தேசிய நூலகவாரியத்தின் ஆதரவுடன் நடத்தியது.

இந்நிகழ்ச்சி 2019 ஆண்டு முதல் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு போட்டிகள் 3 ஆகஸ்ட் 2025 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி முதல் 12:30 மணி வரை விக்டோரியா ஸ்திரீட்டில் இருக்கும் தேசிய நூலகவாரிய கட்டடத்தில் நடைபெற்றது.

பாலர் பள்ளி மாணவர்களுக்கு ‘எனது சிங்கப்பூர்’ என்ற கருப்பொருளில் வண்ணம் தீட்டும் போட்டியும் தொடக்க நிலை 1 முதல் 3 வரை உள்ள மாணவர்களுக்கு ‘ஒரு நிமிடம் பேசலாமா’ என்ற பேச்சுப்போட்டியும் நடைபெற்றது.

தொடக்கநிலை 4 முதல் 6 வரையிலான மாணவர்கள் ‘சிங்கப்பூரின் வனவிலங்குகள் அவற்றின் வாழ்விடங்களை எப்படி பாதுகாக்கலாம்’, ‘நட்பு மற்றும் ஒற்றுமை - சிங்கப்பூரின் 60 ஆண்டுகால பலம் (SG60)‘, ‘எனக்குப் பிடித்த 30 ஆண்டுகால சிங்கப்பூர் தமிழ்க் கதைகள் (NLB30)‘ என்ற தலைப்புகளில் பேசினார்கள்.   130 மாணர்களும் அவர்தம் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கோப்பைகளை இந்தியன்.எஸ்ஜி அமைப்பின் இணை நிறுவனர் திருவாட்டி சுடர்மொழி வழங்கி மாணவர்களைப் பாராட்டினார். 

இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்களிடையே தேசிய பற்றும், ஒற்றுமையும் அதிகரிப்பதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்