நம்பிக்கையும் ஒரு விதையே!

1 mins read
7caa0ee6-d594-40b3-acdc-c25d16a75ab2
செடி முளைத்ததை ஆர்வத்துடன் பார்த்தான் கோபி. - படம்: செயற்கை நுண்ணறிவு
ரக்ஷணாஸ்ரீ.
ரக்ஷணாஸ்ரீ. - படம்: ரக்ஷணாஸ்ரீ

வறட்சியால் வாடிய ஒரு கிராமத்தில், கோபி என்ற சிறுவன் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தான்.

தாத்தாவின் பழைய கொட்டகையை சுத்தம் செய்யும்போது, “நீ எதையும் நம்ப முடியாத நேரத்தில், இதைப் பயன்படுத்து” என்ற குறிப்புடன் ஒரு விதை அவனுக்கு கிடைத்தது.

கிராம மக்கள் அந்த விதையைப் பார்த்து கேலி செய்தபோதும், கோபி மனம் தளராமல் அதை மண்ணில் புதைத்து தினமும் கவனித்து வந்தான்.

நாற்பது நாள்கள் கழித்து, அந்த விதை முளைத்தது. நாளடைவில் அது ஒரு பெரிய மரமாக வளர்ந்து, புதிய வகை பழங்களையும் விதைகளையும் கொடுத்தது.

அந்த விதைகள் மீண்டும் மண்ணில் புதைக்கப்பட்டு, கிராமம் மீண்டும் பசுமையடைந்தது.

“ஒரு விதைக்காக இவ்வளவு சிரமப்பட்டாயா?” என்று ஒருவர் கேட்டபோது, “நம்பிக்கையும் ஒரு விதையே. அதையும் நான் ஒவ்வொரு நாளும் நீரூட்டினேன்” என்று கோபி பதிலளித்தான்.

இந்தக் கதை, நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

ரக்ஷணாஸ்ரீ, தொடக்கநிலை 5, பூச்சுன் தொடக்கப்பள்ளி.

குறிப்புச் சொற்கள்