fontsize: 60% 70% 80% 90%

செய்திக்கொத்து

கவிதை நிகழ்வு

இந்திய கவிஞர்களின் கவிதைகள் வாசிப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 26ம் தேதி சனிக்கிழமை மாலை மெக்நாலி ரோட்டில் உள்ள லா சால் கலைக் கல்லூரியில் மாலை 6.30க்கு நடைபெறுகிறது.
இந்த ஆங்கில நிகழ்ச்சியில் இயற்கை தொடர்ப்பான கவிதைகள் வாசிக்கப்படும்.
குமாரி நோரா சமோசிர், திரு ரமேஷ் பனிக்கர் இருவரும் கவிதைகளை வாசிப்பர்.
இந்திய நுண்கலைக் கழகத்தின் வி.கே.சிவகுமார் குழலும் திரு சின் யென் சூங் எர்கூ வாத்தியமும் வாசிப்பர்.

ஹெண்டர்சன் குழுவின் 28வது பட்டிமன்றம்

ஹெண்டர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு வழங்கும் 28வது பட்டிமன்றம் இம்மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் பட்டிமன்றத்தின் தலைப்பு: ‘மெகாத் தொடர் ஆட்சியும் திரைப்படக் காட்சியும் இன்றி தமிழ்த் தொலைக்காட்சி இயங்க முடியும், இயங்கமுடியாது.’
‘இயங்க முடியும்’ எனும் தலைப்பு தொட்டு பேசுவோர் திரு எம்.ஜே. பிரசாத், திருமதி சுகுணவள்ளி ரணதேவன், திருமதி ஞானமணி. ‘இயங்கமுடியாது’ எனும் தலைப்புக்கு ஆதரவாக, முனைவர் ராஜி சீனிவாசன், திரு ஆர். குமாரசுவாமி, திரு முரளி ஆகியோர் பேசுவார்கள்.

ஜாமியா சிங்கப்பூர் முன் உதாரண தாயார் 2008 விருது

இவ்வாண்டுக்கான முன்னுதாரண தாயாரை ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு தேடுகிறது. அவர் தம் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் சிறந்த உதாரணமாகத் திகழவேண்டும். அனைவரும் போற்றக் கூடிய கொள்கைகள், பண்புகளுடன், தம் குடும்பத்துக்குத் தேவையான மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் வெளிக்கொணரும் தாயாராக இருத்தல் வேண்டும்.

சிங்கப்பூர் ஹிந்தி மையத்தின் 18ம் ஆண்டு நிறைவு விழா

சிங்கப்பூர் ஹிந்தி மையம் தனது 18ம் ஆண்டு நிறைவு விழாவை நேற்றுக் கொண்டாடியது. போக்குவரத்து மற்றும் 2ம் வெளியுறவு அமைச்சர் ரேமண்ட் லிம் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சி விக்டோரியா அரங்கில் நடைபெற்றது.
ஹிந்தி மொழியையும் கலாசாரத்தையும் கற்க ஹிந்தி பேசும் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மையம். தொண்டூழியர்களைக் கொண்டு நடத்தப் படும் இந்த நிறுவனம் தொடங்க முக்கியக் காரணமாக இருந்தவர் திரு எஸ். திவாரி.

ஆஸ்திரேலியாவிடம் போப் மன்னிப்பு

சிட்னி
போப்பாண்டவர் 16 வது பெனடிக்ட், ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சில பாதிரியார்கள் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக போப்பாண்டவர் கூறினார். ஆஸ்திரேலியா வந்துள்ள போப்பாண்டவர், கிறிஸ்துவ பாதிரியார்கள் பலர் கூடியிருந்த கூட்டத்தில் பேசினார். அந்த குற்றத்தைச் செய்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போப் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

$300-ஐப் பறிகொடுத்தார் 75 வயது முதியவர்

புக்கிட் மேரா வியூ புளோக் 123க்குக் கீழே திங்கட்கிழமை இரவு 9.40 மணிக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த 75 வயது முதியவரிடம் திருடன் ஒருவன் தனது கை வரிசையைக் காட்டியுள்ளான். அவரை நோக்கி வந்த அவன், அந்த முதியவரின் சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்த பணப்பையைப் பறித்துக்கொண்டு லோவர் டெல்டா ரோட்டை நோக்கி ஓடி விட்டான்.

வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண பெருவிழா

சீனிவாசப்பெருமாள் கோயிலில் நாளை வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண வைபவம் பெரிய அளவில் நடைபெறுகிறது. அதையொட்டி சிறப்பு பூசைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நாளை வியாழன் மாலை சீனிவாசப்பெருமாள் கோயிலில் இருந்து வரும் உற்சவ மூர்த்திகளுக்கு வரவேற்புப் பூசை. வெள்ளி காலை 9.00க்கு உற்சவ மூர்த்திக்கு 108 கலச திருமஞ்சனம், இரவு 7.30க்கு கோயில்கள் வரிசை, இரவு 8.30க்கு கலை நிகழ்ச்சி நடைபெறும். சனிக்கிழமை காலை 6.00 சிறப்பு சுப்ரபாத சேவை, மாலை 5.00க்கு திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறும்.

அலுவலகத்தில் டிரட்மில் உடற்பயிற்சி சாதனம்

அலுவலகங்களில் பல வேலைகளைச் செய்யும் ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு புதிய சாதனம் வந்துள்ளது.
டிரட்மில் உடற்பயிற்சி சாதனத்தில் நடந்து கொண்டே கணினியில் வேலை செய்யலாம். ஒரு மணி நேரத்தில் அலுவலகத்திற்குள் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று வேலை செய்யலாம். டிரட்மில் சாதனத்தில் கணினிகள் பொருத்தப்பட்டிருக்கும். நடந்து கொண்டே செல்வதால் உடற்பயிற்சி செய்ததாகவும் இருக்கும். அதே சமயம் கணினியில் வேலை செய்யவும் முடியும். இந்த புதிய சாதனத்தை தயாரித்துள்ள அமெரிக்க நிறுவனம் ஒரு வாரத்திற்கு 40 சாதனங்கள் வரை விற்பனை செய்து வருகிறது.

மரபுடைமை விழா

சிங்கப்பூரின் சாதனை படைத்த முன்னோடிகளைக் கொண்டாடும் மரபுடைமை விழா நாளை சனிக்கிழமை தொடங்குகிறது.
காஸ்வே பாயிண்டில் மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குகிறது.
விழாவையொட்டி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள “Someone Like you: Titans of our time” என்ற நுìல் வெளியிடப்படுகிறது.
பாரம்பரிய ஆசிய தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளும் மரபுடைமை விழாவில் இடம் பெறுகின்றன.

{

மாபெரும் ரதத் திருவிழா

கிருஷ்ணா மந்திரின் மாபெரும் ரத யாத்திரை ஜூலை 13, ஞாயிற்றுக் கிழமை தோ பாயோ அரங்கில் நடைபெறுகிறது.
இசை, நடனம், என விமரிசையாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சைவ உணவு விருந்தை அனைவரும் சுவைக்கலாம்.
மாலை 5.00 மணிக்குத் நிகழ்ச்சி தொடங்கும்.
அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு இந்தர்ஜித் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இன, சமய நல்லிணக்க விழாவாக நடைபெறும் இந்த ரத விழாவில் அனைவரும் பங்கேற்கலாம்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838