You are here

வாழ்வும் வளமும்

களைகட்டும் விற்பனைத் திருவிழா

சுதாஸகி ராமன்

சன்டெக் மாநாட்டு மையத்தில் நடைபெறும் ‘சிங்கப்பூர் அனைத் துலக இந்தியக் கண்காட்சி’க்கு வருவோரை வரவேற்க முன்னணி பாலிவுட் நட்சத்திரமான ஷாருக் கானும் இந்திய கிரிக்கெட் சகாப் தமான சச்சின் டெண்டுல்கரும் காத்திருக்கின்றனர். தொலைவிலிருந்து பார்க்கும் போது இவ்விரு பிரபலங்களை நேரில் காண்பதுபோல் இருந்தா லும் அருகே சென்ற பின்னரே அவர்கள் மெழுகுச்சிலைகளாக நிற்பது தெரியும்.

சன்டெக் சிட்டியில் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி

படம்: டி ஐடியஸ், இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய விற்பனை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி (SIIEXPO) இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் வணிகத் துறை அமைச்சு அமைத்த இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம், இவ்வாண்டு 80க்கும் மேலான பங்கேற்பாளர்களை அழைத்து வருகிறது. இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் ஏறத்தாழ 70 விழுக் காடு பங்களிக்கும் சம்மேளனம், 2012ஆம் ஆண்டு முதல் SIIEXPO வர்த்தகக் கண் காட்சிக்குக் கூட்டாக ஏற்பாடு செய்து பங்கெடுத்து வருகிறது.

பர்வீன் சுல்தானாவுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் வந்துள்ள பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு சையது ஆல்வி சாலையிலுள்ள ஆனந்த பவன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் நடைபெறும்.

பழனியில் அரிய கற்சிலைகள்

பழனி: பழனி, புதுஆயக்குடி குமாரநாயக்கன் குளத்தின் தெற்குக் கரை அருகே வயல் வெளியில் சப்த கன்னியர் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. சப்த கன்னியர் தொகுப்புச்சிலையில் கடைசி 4 தெய்வங்களான வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ் வரி ஆகியவற்றை ஒரே பலகைக் கல்லில் வடிவமைத்துள்ளனர். சப்த கன்னிமார்களில் முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி போன்ற உருவங்கள் கிடைக்க வில்லை. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள சிலைகளுக்கு அருகே பாறையில் உளியால் செதுக்கிய சுவடுகள் தென்படுகின்றன.

‘ராஜ’ அம்சங்களுடன் தீபாவளி கொண்டாட்டங்கள்

படம்: திமத்தி டேவிட்

ராஜா, ராணி வேடங்களில் கைபேசி செயலி மூலம் புகைப்படம் எடுத்துகொள் வது போன்ற புதிய அம்சங்களை இந்த ஆண்டின் லிட்டில் இந்தியா தீபாவளி கொண்டாட்டங்களில் எதிர்பார்க்கலாம். அரச மாளிகை, ராஜ யானைகள், நடன உற்சவம் என பழங்கால மன்னர் காலத்தை கருப்பொருளாகக் கொண்டு இருக்கிறது இவ்வாண்டின் லிட்டில் இந்தியா தீபாவளிக் கொண்டாட்டங்கள். அடுத்த மாதம் 2ஆம் தேதி தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சியுடன் லிட்டில் இந்தியாவில் பண்டிகை குதூகலம் களைகட்டவிருக்கிறது. அன்றிரவு ரேஸ் கோர்ஸ் சாலையில் கண்கவர் உற்சவ ஊர்வலம் நடக்கவுள்ளது.

கர்நாடக சங்கீத கருத்தரங்கு - இசை முத்துக்கள்

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தஞ்சாவூர் பாரம்பரிய இசைப் பள்ளியின் நிறுவனர் திருமதி கௌரி கோகுல் அவர்கள் வழங்கும் ‘இசை முத்துக்கள்’ எனும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பாடல்களை இயற்றியவர்களையும் அந்தப் பாடல்களையும் பற்றிய இந்தக் கருத்தரங்கு வரும் செப்டம்பர் மாதம் 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கர்நாடக சங்கீதத்தில் அறிமுகம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்துகொள்ள 40 வெள்ளி கட்டணம்.

கல்வித் தரம் உயர்த்தும் உன்னதத் திட்டம்

படம்: திமத்தி டேவிட்

மும்பையிலிருந்து சுதாஸகி ராமன்

கட்டடத்தின் நுழைவாயிலை அடைந்ததும் பிள்ளைகள் எழுப்பிய சத்தம் காதில் விழுந்தது. வகுப்பு அறையை அடைந்தபோது சிறார் கள் அங்குமிங்கும் ஓடியபடி இருந் ததைக் காண முடிந்தது. வேறு சிலர் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். பாடத்தில் கவனம் செலுத்தாத அந்த மாண வர்களைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் தொடர்ந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். சிங்கப்பூரின் வீவக நான்கறை வீட்டின் வசிப்பறைதான் அந்த வகுப்பறையின் பரப்பளவு. அதில் மூன்று ஆசிரியர்கள், 45 பாலர் களுக்கு எழுத்துகளுடன் பாடல் களையும் கதைகளையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

இசைகள் சங்கமிக்கும் சில்வர் ஆர்ட்ஸ் 2017

முஹம்மது ரஃபி. செய்தி, படம்: திமத்தி டேவிட்

மூத்தோரை ஆதரிக்கவும் கலைகள் மூலம் அவர்களின் நலனைப் பேணிக்காக்கவும் இவ் வாண்டு ஆறாவது முறையாக செப்டம்பர் மாதம் முழுதும் நான்கு வார இறுதிகளில் ‘சில்வர் ஆர்ட்ஸ் 2017’ எனும் தலைப்பில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறது தேசிய கலைகள் மன்றம். இளையரையும் மூத்தோரையும் இணைக்கும் நோக்கத்துடன் தேசிய கலைகள் மன்றம், மூத் தோர் சார்ந்த இசை, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், குறும் பட வெளியீடு, பயிலரங்குகள் என 38 நிகழ்ச்சிகளை 20 இடங் களில் படைப்பதோடு அவற்றில் சுமார் 70 முதியவர்களையும் ஈடுபடுத்துகிறது.

Pages