இந்தியக் கட்டடக் கலையின் சிறப்பையும் பரத நாட்டியத்தின் அழகையும் ஒன்றிணைத்துப் படைக்கிறது ‘நிர்மாணிக்கா’.
அழகையும் நளினத்தையும் அடிப்படையாகக் கொண்ட இரு கலைகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
பரதநாட்டிய அபிநயங்கள், அசைவுகள் வழி இந்திய கட்டட அமைப்பு, அழகு, வரலாறு, தத்துவம், அவற்றின் அதிசயங்கள் போன்றவற்றைச் சித்திரிக்கிறது நிர்மாணிக்கா.
இந்தியாவிலுள்ள தாஜ் மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொணாரக், இந்தோனீசியாவின் போரோபுதூர் போன்ற உலகப் பிரபலமான இந்தியரின் கட்ட அமைப்புகளின் நுணுக்கங்களை நாட்டியம் விவரிக்கிறது.
தொழில் நுட்பம் வளர்ச்சியுற்றிராக அக்காலத்தில் கட்டடக் கலைஞர்களின் படைப்பாற்றலையும் கற்பனா சக்தியையும் ஆராய்கிறது
இந்த நாட்டியப் படைப்பு.
சிங்கப்பூரின் மூத்த நடனக் கலைஞர் திருமதி நீலா சத்தியலிங்கம் நாட்டியத்தை இயக்கியுள்ளார்.
அப்சரஸ் ஆர்ட்ஸ் படைக்கும் நாட்டியத்தின் மையக் கருவை பிரபல இசைக் கலைஞர் அரவிந்த் குமாரசாமி உருவமைத்துள்ளார்.
அப்சரஸ் நடனமணிகளுடன் புகழ்பெற்ற நடனக் கலைஞர் அஞ்சனா ஆனந்தும் நடனமாடுகிறார்.
அனிஷ் ராம், அரவிந்த் குமாரசாமி, டி.ரமணன், {வித்யா, கோவிந்தராஜுலு நாயுடு, கவிதா ஜெயராமன், என்.பல்லவராஜன், எம்.கஜன், தீபன் கணேஷ் ஆகியோர் நேரடி இசை வழங்குகின்றனர்.
எஸ்பிளனேட் அரங்கில் ஜூலை 30, 31 இரு தேதிகளிலும் இரவு 8.00 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்.
கட்டணம்: $25, மூத்த குடிமக்கள், மாணவர்களுக்குச் சிறப்புக் கட்டணம்” $16.