You are here

விளையாட்டு

சிங்கப்பூரின் அனைத்துலக வெற்றியாளர்

கிண்ணம்: இண்டர் மிலான் வெற்றி சிங்கப்பூரில் நடைபெற்று முடிந்த முதல் நட்புமுறை அனைத்துலக வெற்றியாளர் காற்பந்து கிண்ணப் போட்டியை இத்தாலியின் இண்டர் மிலான் குழு வென்றுள்ளது. இப்போட்டித் தொடரில் இண் டர் மிலானுடன் இங்கிலாந்தின் செல்சி, ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுக்கள் பங்கேற்றன. சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இண்டர் மிலான் செல்சியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

விராத் கோஹ்லி: இலங்கைக்கு எதிரான வெற்றி சிறப்புமிக்கது

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி மிகவும் சிறப்புமிக்கது என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியுள்ளார். இந்தியா=இலங்கை அணிகள் மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது டெஸ்ட் அரங்கில் இலங்கை அணிக்குக் கிடைத்த மிக மோசமான தோல்வி ஆகும். போட்டிக்குப் பின்பு பேசிய கோஹ்லி இந்திய அணியின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார்.

இலங்கையைத் தோற்கடித்து இந்தியா மாபெரும் வெற்றி

படம்: ஏஎஃப்பி

காலே: இலங்கையின் காலே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடை யிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 26ஆம் தேதி தொடங்கி இன்று 30ஆம் தேதி வரை நடை பெறவிருந்தது. இந்நிலையில் நேற்று நான்காவது நாள் நடந்த ஆட்டத்திலேயே இந்தியா 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங் கையைத் தோற்கடித்து மாபெரும் வெற்றியைத்தட்டிச் சென்றது. இலங்கையில் இந்திய அணி பெற்ற பெரிய வெற்றி இது என்று கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வலுவான ஆட் டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. கேட்ச்சை தவறவிடுதல், மோசமான பந்து வீச்சு போன்ற ஏராளமான தவறு கள் செய்தும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

கேப்டன் மிதாலி ராஜிக்கு ரூ.1 கோடி

 மிதாலி ராஜ்

மும்பை: இங்கிலாந்தில் அண்மையில் நடந்த பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணிக்குப் பரிசுகள் குவிந்து வருகின்றன. கிரிக் கெட் வாரியம் தலா ரூ.50 லட்சம் வழங்கி கௌரவித்தது. தங்கள் துறையில் பணியாற்றும் பத்து வீராங் கனைகளுக்குப் பதவி உயர்வும், ரூ.13 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப் படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதே போல் அணியில் அங்கம் வகித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த பூனம் ரவுத், மந்தனா, ஆல்-ரவுண்டர் மோனா மேஷ்ரம் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்க அந்த அரசு முடிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

இந்தியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியிடம் தோல்வியடைந்த இந்தியா ‘ஏ’ அணி, நேற்று ஆப்கானிஸ் தான் ‘ஏ’ அணியை எதிர்கொண்டது. பூவா தலையாவில் வென்ற இந்திய ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்தடித்தது. அக்சார் பட்டேல், சாகல் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் 40.5 ஒவரில் 149 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பி.வி.சிந்துவுக்கு துணை ஆட்சியர் பணி

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

அமராவதி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை ஆட்சியர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பி.வி.சிந்து நேற்று முன்தினம் தனது பெற் றோருடன் தலைமைச் செயலகத் துக்குச் சென்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார். அப்போது அவருக்கு துணை ஆட்சியர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

பயர்ன் மியூனிக்கை பந்தாடிய இன்டர் மிலான்

யானைக்கும் அடி சறுக்கும் என்ற முதியோர் வாக்குக்கு இணங்க காற்பந்தில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண் டுள்ள பயர்ன் மியூனிக் குழு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத் துலக வெற்றி யாளர் கிண்ணப் போட்டி ஒன்றில் இத்தாலியின் இன்டர் மிலான் குழுவிடம் தோல்வியைத் தழுவி யது. தற்காப்பு ஆட்டத்தில் பெயர் பெற்ற இத்தாலியர்கள் மின்னல் வேகத்தில் இரு முறை எதிர்த் தாக்குதல் நடத்தியதில் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்- குள் 2 கோல் போட்டு பயர்ன் மியூனிக்கின் தோல்வியை உறுதி செய்தனர்.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஸ்கூலிங்

புடாபெஸ்ட்: ஹங்கேரியின் தலை நகர் புடாபெஸ்ட்டில் உலக வெற்றி யாளர் நீச்சல் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சிப் பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங் 51.21 விநாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார். அவர் நான்காவது அனைத்து வகை போட்டிகளையும் கடந்து அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறிச் சென்றுள்ளார். இன்று மாலை நடைபெறவிருக் கும் அரை இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் இன்னொரு வீரரான குவா ஸெங் வென், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சிப் பாணி போட்- டியில் 52.13 விநாடிகள் எடுத்துக் கொண்டார். அதன்காரணமாக அவர், அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்டார்.

தேசிய சாதனையை முறியடித்த நீச்சல் வீரர்

குவா ஸெங் வென்

சிங்கப்பூர் நீச்சல் வீரரான 20 வயது குவா ஸெங் வென் 200 மீட்டர் மல்லாந்து நீச்சலில் புதிய தேசிய சாதனையைப் படைத்து இருக்கிறார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் டில் நடந்துவரும் உலக வெற்றி யாளர் போட்டிகளில் 200 மீட்டர் தூரத்தை இவர் 1 நிமிடம் 59.49 வினாடிகளில் கடந்து, 24வது இடத்தைப் பிடித்தார். முதல் 16 பேர் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறுவர் என்பதால் அவ்வாய்ப்பு குவாவின் கையைவிட்டு நழுவியது. இருப்பினும், அவர் எடுத்துக் கொண்ட நேரம் புதிய சிங்கப்பூர் சாதனையாக அமைந்தது. மல்லாந்து நீச்சலில் 200 மீ. தூரத்தை 2 நிமிடம் 00.45 வினாடி களில் அவர் கடந்திருந்ததே முந்தைய தேசிய சாதனை.

முதல் டெஸ்ட்: இலங்கை அணி திணறல்

படம்: ராய்ட்டர்ஸ்

காலே: இருவர் சதமும் இருவர் அரை சதமும் அடிக்க, இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்சில் 600 ஓட்டங்களைக் குவித்தது. அடுத்து பந்தடிக்கத் தொடங் கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங் களை எடுத்து தடுமாறி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடுவதற் காக விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் காலே விளையாட்டரங் கில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 167 பந்து களில் 190 ஓட்டங்களை விளாசி னார்.

Pages