You are here

விளையாட்டு

உட்ஸ்: மது அருந்தவில்லை, மருந்தே காரணம்

நியூயார்க்: மது அருந்தியதாகக் கைது செய்யப்பட்ட பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் (படம்) தான் உட்கொண்ட மருந்து களால் ஏற்பட்ட கோளாறே இப் பிரச்சினைக்குக் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் மது அருந்திவிட்டு காரை ஓட்டிச் சென்றதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனையடுத்து போலிசார் அவரைக் கைது செய் தனர். ஆனால், சட்டரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக அவர் உறுதியளித்ததையடுத்து போலிசார் அவரை விடுவித்தனர். இது தொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் பேச மறுத்து விட்டார். ஆனால், சிறிது நேரத் தில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார்.

25 ஆண்டுகளுக்குப் பின் கண்ணீருடன் விடைபெற்றார்

இத்தாலியின் முன்னணி காற்பந்துக் குழுக்களில் ஒன்றான ‘ஏஎஸ் ரோமா’விற்காக கடந்த 1992ஆம் ஆண்டில் அறிமுகமானார் ஃபிரான்சிஸ்கோ டோட்டி. அப்போது முதல் இதுநாள் வரை வேறு எந்தக் குழுவிற்கும் தாவாமல் அந்தக் குழுவிற்காகவே 25 ஆண்டுகளாக விளையாடி வந்த டோட்டி, நேற்று முன்தினம் கெனோவா குழுவிற்கெதிரான மோதலுடன் காற்பந்தில் இருந்து விடைபெற்றார். ரோமாவிற்காக மொத்தம் 619 போட்டிகளில் விளையாடிய இவர் 250 கோல்களை அடித்துள்ளார். அத்துடன், 58 அனைத்துலக ஆட்டங்களில் பங்கேற்று, ஒன்பது கோல்களையும் புகுத்தியுள்ளார். 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இத்தாலி குழுவிலும் இவர் அங்கம் வகித்தார்.

மெஸ்ஸிக்கு தங்கக் காலணி

பார்சிலோனா: உலகின் முன்னணி காற்பந்து வீரரான அர்ஜெண்டினா வின் லயனல் மெஸ்ஸி நான்காம் முறையாக ஐரோப்பாவின் ‘தங்கக் காலணி’ விருதை வென்றுள்ளார். இதன்மூலம், தங்கக் காலணி விருதை அதிக முறை வென்ற சாதனையை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வுடன் அவர் பகிர்ந்துகொண்டார். தங்கக் காலணி விருதுக்கான புள்ளிப் பட்டியலில் மெஸ்ஸி 74 புள்ளிகளுடன் முதலிடம் பிடித் தார். 50 புள்ளிகளை மட்டும் பெற்ற ரொனால்டோவால் பத்தாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. ஸ்பானிய லா லீகாவில் பார்சிலோனா குழுவிற்காக விளை யாடி வரும் மெஸ்ஸி 2016=17 லீக்கில் 37 கோல்களை அடித்தார்.

பயிற்சியில் இந்தியா ஆதிக்கம்

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 45 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டு நாடுகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

செல்சியை முறியடித்த வெங்கரின் படை

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஆர்சனல் வென்றுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்ற செல்சியை அது 2-1 எனும் கோல் கணக்கில் தோற் கடித்தது. இதன் மூலம் எஃப்ஏ கிண்ணத்தை ஆர்சனல் 13 முறை வென்றுள்ளது. அதன் நிர்வாகி ஆர்சின் வெங்கரின் தலைமை யின்கீழ் ஆர்சனல் அதன் ஏழாவது எஃப்ஏ கிண்ணத்தை ஏந்தி உள்ளது. இப்பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியிலும் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியிலும் ஏமாற்றத்தைச் சந்தித்த ஆர்சனல் எஃப்ஏ கிண் ணத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.

கடைசி நேர சொந்த கோல்: பிரெஞ்சு கிண்ணம் வென்ற பிஎஸ்ஜி

படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரஞ்சு கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) வாகை சூடி கிண்ணம் ஏந்தி உள்ளது. ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது ஆஞ்சே குழுவின் இஸா சிசோக்கா போட்ட சொந்த கோல் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. 1957ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரெஞ்சு கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆஞ்சே குழு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கியதும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் தாக்குதல்களை நடத்தியது. பிஎஸ்ஜியின் ஏங்கல் டி மரியா அனுப்பிய பந்து ஆஞ்சே தற்காப்பு ஆட்டக்காரர் மீது பட்டு கோல் கம்பத்தை உரசிச் சென்றது.

உலகக் கிண்ண வாள்வீச்சு: தமிழக வீராங்கனைக்குத் தங்கம்

தமிழக வீராங்கனை பவானி தேவி

ரெஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சேட்லைட் உலகக் கிண்ண வாள்வீச்சில் இந்தியாவைப் பிரதிநிதித்த தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார். போட்டியின் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி. ஏ. பவானி தேவி சிறப்பாகச் செயல்பட்டு தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் 15-13 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம்சனை அவர் வீழ்த்தினார். உலக அளவில் வாள்வீச்சில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றார். இதற்கு முன்பு அவர் ஆசிய சேட்லைட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா

சௌத்ஹேம்டன்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி முன்பு தென்னாப்பிரிக்கா அணி இங்கி லாந்துடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி சௌத்ஹேம்டனில் நேற்று முன் தினம் பகல்=இரவாக நடந்தது. இங்கிலாந்து அணி நிர்ணயிக் கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ஓட்டங்கள் குவித்தது. தென்னாப் பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ஓட்டங்கள் எடுத்து இரண்டு ஓட்டங்களில் தோற்றது.

பெர்னார்டோ சில்வாவை ஒப்பந்தம் செய்த சிட்டி

படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: பிரெஞ்சுக் குழு மொனாக்கோவுக்காக இந்தப் பருவத்தில் களமிறங்கிய பெர்னார் டோ சில்வாவை இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி 43 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய் துள்ளது. போர்ச்சுகலைச் சேர்ந்த மத்தியத் திடல் ஆட்டக்காரரான சில்வா அடுத்த பருவத்திலிருந்து சிட்டிக்காக விளையாடுவார். இந்தப் பருவத்தில் பிரெஞ்சுக் காற்பந்து லீக் போட்டியில் பட்டம் வென்று சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரை இறுதி வரை சென்ற மொனாக் கோ குழுவில் இடம்பெற்றிருந்தார் சில்வா.

சுதிர்மான் பூப்பந்துக் கிண்ணப் போட்டி: இறுதிச் சுற்றுக்கு தென்கொரியா தகுதி

கோல்டு கோஸ்ட்: சுதிர்மான் பூப்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தென்கொரியா தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இதுவரை மூன்று முறை கிண்ணம் ஏந்தியுள்ள தென்கொரியா நேற்று நடைபெற்ற அரையிறுதியில் தாய்லாந்தை 3=1 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. அரையிறுதியின் முதல் சுற்றில் தாய்லாந்து வெற்றி பெற்றது. தென்கொரியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியை 41 நிமிடங்களில் 21=16, 21=12 எனும் புள்ளிக் கணக்கில் தாய்லாந்து ஜோடி வீழ்த்தியது. முதல் சுற்றில் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய தென் கொரியா துவண்டுவிடாமல் போராடியது. அடுத்த சுற்றில் ஆண் களுக்கான ஒற்றையர் பிரிவு வீரர்கள் களமிறங்கினர்.

Pages