You are here

விளையாட்டு

ஆணிவேராக நின்ற ரூட்

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து, பங்ளாதேஷ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 128 ஓட்டங்களையும் விக்கெட் காப்பாளர் முஷ்ஃபிகுர் ரஹிம் 79 ஓட்டங்களையும் விளாசினர். அடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் ஒரே ஓட்டத்துடன் வெளியேறினார்.

பயிற்றுவிப்பாளர் பதவிக்கு வீரேந்தர் சேவாக் போட்டி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான போட்டியில் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் குதித்துள்ளார். இப்போதைய பயிற்றுவிப்பாளர் அனில் கும்ளேவின் பதவிக்காலம் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணித்தலைவர் விராத் கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலருக்கும் கும்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரத் பேல்: தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பில்லை

படம்: ராய்ட்டர்ஸ்

கார்டிவ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடவேண்டும் என்ற தீராத ஆசையால், ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் வலியைப் போக்க மாத்திரைகளை உட் கொண்டு பயிற்சியை மேற் கொண்டபோதிலும் நாளை வேல் ஸின் கார்டிவ் நகரில் நடை பெற உள்ள இத்தாலியின் யுவெண்டஸ் குழுவுடனான இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக தாம் களமிறங்க வாய்ப்பில்லை என்பதை ரியால் மட்ரிட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கேரத் பேல் ஒப்புக் கொண்டுள்ளார்.

தினே‌ஷுக்கு வாய்ப்பு: விராத் கோஹ்லி சூசகம்

படம்: ஏஎஃப்பி

லண்டன்: எட்டு நாடுகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கி லாந்தில் இன்று தொடங்குகிறது. லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடக்கும் முதல் ஆட்டத்தில் இங்கி லாந்தும் பங்ளாதே‌ஷும் மோது கின்றன. இந்தத் தொடரில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் வரும் 4ஆம் தேதி மோதவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் குழு நிர்வாகியிடம் விசாரணை

சிங்கப்பூர் காற்பந்துக் குழு அண்மையில் அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்றபோது ஒழுங்குவிதிகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, குழுவின் நிர்வாகி ஃபரெஹான் ஹுசைனிடம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏஎஸ்) விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது என ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி கூறுகிறது. இதன் தொடர்பில் சிங்கப்பூர் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையமான ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்பிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து விசாரிக்கும்படி ‘ஸ்போர்ட்எஸ்ஜி’, சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தைக் கேட்டுக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

‘உட்ஸ் உறக்கத்தில் இருந்தார்’

நியூயார்க்: உலகின் முன்னாள் முதல்நிலை கோல்ஃப் வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ், 41, மது அருந்திவிட்டு காரோட்டிய தாகச் சில நாட்களுக்குமுன் கைது செய்யப்பட்டார். ஆயினும், சட்டரீதியான நட வடிக்கைக்கு ஒத்துழைப்புத் தரு வதாக உறுதியளித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். “நான் மது அருந்திவிட்டு காரோட்டவில்லை. நான் எடுத்துக் கொண்ட மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்,” என்று அறிக்கை மூலம் உட்ஸ் தெரிவித்திருந்தார்.

லெஸ்டரைவிட்டு விலக ரியாத் மாரெஸ் விருப்பம்

லெஸ்டர்: கடந்த 2015-16 பருவத்தில் லெஸ்டர் சிட்டி காற் பந்துக் குழு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களில் அல்ஜீரிய வீரர் ரியாத் மாரெசும் ஒருவர். லீக் பட்டம் வென்றபின் மேலும் ஓராண்டுக்கு லெஸ்டருக்காக விளையாட ஒத்துக்கொண்டதாகக் கூறிய 26 வயது மாரெஸ், இப் போது அக்குழுவைவிட்டு வெளி யேற விரும்புகிறார். “லெஸ்டர் சிட்டி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இருந்தாலும் நான் நேர்மையாக, வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன்.

கிரிக்கெட்: சிங்கப்பூர் வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் மூன்றாம் நிலை போட்டியில் சிங்கப்பூர் கன டாவை வீழ்த்தியது. முதலில் பந்தடித்த சிங்கப்பூர் 166 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய கனடாவை 164 ஓட்டங்களி லேயே சுருட்டிய சிங்கப்பூர் 2 ஓட்டங் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தலா 6 புள்ளிகளை கனடா, சிங்கப்பூர் அணிகள் பெற்றன. ஆனால் ஓட்ட விகித அடிப்படையில் கனடா 2ஆம் நிலை கிரிக்கெட்டிற்கு முன்னேறியது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாம் நிலையிலேயே நீடிக்கிறது.

இங்கிலாந்து தோல்வி

லண்டன்: மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கி லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இத்தோல்வியில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டோம் என்று கூறினார் இங்கிலாந்தின் அணித் தலைவர் மோர்கன். முதலில் பந்தடித்த இங்கி லாந்து அணி, தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் அபார பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியா மல் 31.3 ஓவர்களில் 153 ஓட்டங் களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.

பிரிமியர் லீக்கில் ஹடர்ஸ்ஃபீல்ட்

லண்டன்: சாம்பியன்‌ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற ஹடர்ஸ்ஃபீல்ட் 45 ஆண்டு களுக்குப் பிறகு முதல் முறை யாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது. ரெட்டிங் குழுவிற்கு எதிரான இறுதி பிளேஆஃப் போட்டியில் விளையாடிய ஹடர்ஸ்ஃபீல்ட் குழு, பெனால்டி ‌ஷூட்அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கூடுதல் நேரம் விளையாடிய பிறகும் இரு குழுக்களும் கோல் எதுவும் போடாத நிலையில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி முறை நடத்தப்பட்டது. அதில், ஹடர்ஸ்பீல்ட் வீரர் கிறிஸ்டோபர் ஸ்டெண்ட்லர் புகுத்திய கோலால் அக்குழு வெற்றி பெற்றது.

Pages