You are here

விளையாட்டு

பிரெஞ்சு பொது விருதைத் தட்டிச்சென்ற ரஃபேல் நடால்

பாரிஸ்: ஸ்பானிய டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், 10வது முறையாக பிரெஞ்சு பொது விருதைத் தட்டிச் சென்று வரலாறு படைத்துள்ளார். பாரிசில் நேற்று முன்தினம் நடந்த இறுதிச்சுற்றில் 6-2, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சுவிஸ் விளை- யாட்டாளர் ஸ்டான் வார்ரிங்- காவை அவர் வீழ்த்தினார். டென்னிஸ் பொது விருதுப் போட்டிகளில் விளையாட்டாளர் ஒருவர் 10 முறை ஃபிரெஞ்சு பொது விருதை வெல்வது இதுவே முதன்முறை. பாரிசில் தமது 22வது கிராண்ட் ஸ்லாம் இறுதிச் சுற்றில் விளையாடிய அவர், மூன் றாவது முறையாக நேர் செட் களில் வெற்றிப் பெற்றார்.

கோஹ்லி: டிவில்லியர்ஸ் விக்கெட்டே திருப்புமுனை

லண்டன்: தென்னாப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ், மில்லர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே ஆட்டத்தின் திருப்- புமுனையாக அமைந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியுள்ளார். ஐசிசி வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா = தென் னாப்- பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடை பெற்றது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதால் இரு அணி- களுக்கும் முக்கிய ஆட்ட மாக இருந்தது.

பொதுவிருது டென்னிஸ்: 20 வயது வீராங்கனை சாதனை

ஆஸ்டாபென்கோ. படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரெஞ்சு பொதுவிருது டென் னிஸ் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி லாட்வியா வீராங்கனை ஆஸ்டா- பென்கோ வெற்றியாளர் பட்டத்- தைக் கைப்பற்றினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்றழைக்- கப் படும் பிரெஞ்சு பொதுவிருது டென்னிஸ் விளையாட்டுத் தொடர் பிரான்சின் தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. இதில் பெண்- கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 4ஆம் நிலை வீராங்- கனைச் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47ஆம் நிலை வீராங்- கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ- வும் (லாத்வியா) மோதினர். அனுபவம் வாய்ந்த ஹாலெப்பே வெற்றி பெறுவார் என்று கணிக்கப்- பட்ட நிலையில் முடிவு அதற்கு நேர்மாறாக அமைந்தது.

காற்பந்து: இங்கிலாந்தை காப்பாற்றிய ஹேரி கேன்

ஹேம்டன் பார்க்: இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று காற்பந்துப்போட்டி ஒன்றில், அது- வரை முன்னணியில் இருந்த ஸ்காட்லாந்துக்கு எதிராக, ஆட்டம் முடியும் தறுவாயில் கோல் போட்டு இங்கிலாந்தைக் காப்பாற்றினார் ஹேரி கேன். ஆட்டத்தின் 70வது நிமி டத்தில் ஆக்ஸ்லேட் சேம்பர்லேன் போட்ட கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆனால், ஆட்டத்தின் 87ஆம் நிமிடம் தொடங்கி மூன்று நிமிடங்களில், கிடைத்த ப்ரீகிக் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இரண்டு கோல்கள் போட்டு இங்- கிலாந்தை தோல்வி யின் விளிம்- பிற்குத் தள்ளினார் ஸ்காட்லாந்தின் செல்டிக் குழு வின் லே கிரிஃபிட்ஸ்.

குசால் பெரேராவிற்குப் பதிலாக தனஞ்சயா

ஐ.சி.சி. வெற்றியாளர் கிண்ணத் தொடரில் கடந்த 8ஆம் தேதி இந்தியா = இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் 4வது வீரராக களம் இறங்கிய குசால் பெரேரா 44 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் மோசமாக இருந்ததால் மாற்று வீரரைத் தேர்வு செய்ய இலங்கை முடிவு செய்தது.

நம்பமுடியாத வெற்றியை ருசித்த பங்ளாதேஷ்

கார்டிஃப்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியை பங்ளா தேஷ் வெளியேற்றி உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பங்ளா தேஷ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியது. பங்ளாதேஷ் அணியின் ஷாகிப் அல் ஹசான், மஹ் முதுல்லா ஆகியோர் சதங்களை அடித்து நியூசிலாந்தின் தோல் விக்கு வித்திட்டனர். நியூசிலாந்து முதலில் பந்தடித்து 265 ஓட்டங்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து பந்தடித்த பங்ளாதேஷ் முதலில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் டுகளையும் பிறகு 33 ஓட்டங் களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பங்ளாதேஷ் தோல்வி அடையும் என்று முதலில் நம்பப்பட்டது.

அர்ஜெண்டினா காற்பந்துக் குழுவை வரவேற்ற சிங்கப்பூர் ரசிகர்கள்

அர்ஜெண்டினா காற்பந்துக் குழு சிங்கப்பூர் வந்தடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று முன்தினம் பிரேசிலுக்கு எதிராக நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் 1=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜெண்டினா, சாங்கி விமான நிலையத்தில் நேற்று மாலை தரையிறங்கியது. மெல்பர்னில் ஏறத்தாழ 100,000 ரசிகர்களுக்கு முன்பாக விளை யாடியதை அடுத்து, எவ்வித ஆர்ப்பாட்டமின்றி அமைதியான முறையில் சிங்கப்பூர் ரசிகர் களுக்குத் தெரியாமல் இங்கு வர அர்ஜெண்டினா குழு முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி

செயிண்ட் லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடு கிறது. இதில் முதல் போட்டி நேற்று முன்தினம் செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்தடித்தது. அவ்வணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 212 ஓட்டங்கள் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ஓட்டங்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஜோசஃப் ஸ்கூலிங் அசத்தல்

சிங்கப்பூரின் நட்சத் திர வீரர் ஜோசஃப் ஸ்கூலிங்

டெக்சஸ் சீனியர் சர்கிட் நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் நட்சத் திர வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் நேற்று காலை நடைபெற்ற 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியை அவர் 51.82 வினாடிகளில் முடித்தார். இது இந்தப் பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உலகின் ஏழாவது ஆக விரைவான நேரமாகும். கடந்த வியாழக்கிழமையன்று 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியிலும் அவர் வென்றார்.

தவானின் சதமும் டோனியின் முயற்சியும் வீணாயின

லண்டனில் நடைபெற்றுவரும் வெற்றியாளர் கிண்ணப்போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதிய ஆட்டத்தில் தவானின் சதமும் 300 ஓட்டங்களைத் தாண்ட உதவிய டோனியின் முயற்சியும் வீணாகும் வகையில் இந்தியாவின் தோல்வி அமைந்தது. விக்கெட் சரிவால் மிடில் ஓவர்களில் ஓட்ட வேகம் சற்று தளர்ந்தாலும் ‌ஷிகர் தவானும் டோனியும் கைகோர்த்து ஆட்டத்- திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டி- னர். 38 ஓவர்களில் இந்தியா 200 ஓட்டங்களைத் தாண்டியது. அபாரமாக ஆடிய ‌ஷிகர் தவான் பவுண்டரி அடித்துத் தனது 10வது சதத்தை பூர்த்தி செய்தார். தவானும், டோனியும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை மளமள வென உயர்த்தினர்.

Pages