You are here

விளையாட்டு

இறுதி வாய்ப்பை எட்டிப் பிடித்த கார்சியா

கேரலைன் கார்சியா. படம்: ஏஎஃப்பி

இந்தப் பருவத்தின் இறுதித் தொடராக சிங்கப்பூரில் நடக்கும் ‘டபிள்யூடிஏ ஃபைனல்ஸ்’ போட் டிகளில் களமிறங்கும் எட்டாவது, இறுதிப் போட்டியாளராகத் தேர்வு பெற்றுள்ளார் பிரான்ஸ் நாட்டின் கேரலைன் கார்சியா. மாஸ்கோவில் நடந்துவரும் கிரெம்ளின் கிண்ணப் போட்டி யில் இருந்து காயம் காரணமாக பிரிட்டனின் ஜோகனா கோன்டா விலகியதை அடுத்து அவ்வாய்ப்பு கார்சியாவுக்குக் கிட்டியது.

மலேசியப் பயிற்றுவிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மலேசிய தேசிய முக்குளிப்புப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் அடுத்த ஒலிம்பிக் போட்டி களுக்காகப் பயிற்சி பெற்றுவரும் ஒரு வீராங்கனையைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் உள்ள தேசிய நீர் விளையாட்டு மையத்தில் ஹுவாங் சியாங் என்ற அந்தப் பயிற்றுவிப்பாளர் கடந்த மாதம் அந்த 20 வயதுப் பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக கூறப்பட்டது. இருந்தாலும், இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை 35 வயதான சியாங் மறுத்ததாக அவரது வழக் கறிஞர் தெரிவித்தார்.

மொரின்யோ எச்சரிக்கை

லிவர்பூல்: உலகக் கிண்ணக் காற் பந்துத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாட வேண்டியிருந்ததால் இரு வார இடைவெளிக்குப் பிறகு இவ்வார இறுதியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிகள் மீண்டும் களைகட்டவுள்ளன. சிங்கப்பூர் நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பரம எதிரிகளான லிவர்பூல் = மான்செஸ்டர் யுனை டெட்- குழுக்கள் மோதுகின்றன. இந்தப் பருவத்தில் இதுவரை ஏழு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மான்செஸ்டர் சிட்டி குழுவைப் போலவே 19 புள்ளி களைப் பெற்று இருந்தாலும் கோல் வித்தியாசத்தில் யுனைடெட் இரண்டாம் நிலையில் நீடிக்கிறது.

அர்ஜெண்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸி

படம்: ஏஎஃப்பி

எக்வடோர்: மெஸ்ஸியின் கோல் களால் தப்பிப் பிழைத்த அர்ஜெண் டினா உலகக் கிண்ணக் காற்பந் தாட்டத்திற்கு முன்னேறியது. எக்வடோர் குழுவிற்கு எதிரான இந்த ஆட்டத்தை அர்ஜெண்டினா வாழ்வா சாவா என்ற நிலையில் எதிர்கொண்டது. “உலகின் சிறந்த ஆட்டக்கார ரான மெஸ்ஸியை அர்ஜெண்டினா குழு கொண்டுள்ளது அதிர்ஷ்ட வசமானது. “அனைத்தும் மெஸ்ஸியை மட் டுமே சார்ந்து இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

சரிவிலிருந்து மீட்ட சந்திமால்

அபுதாபி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சதம் விளாச, அந்த அணி முதல் இன்னிங்சில் 419 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை எடுத்திருந்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. டிக்வெல்லா 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்வரிசை ஆட்டக்காரர்களில் தில்ருவான் பெரேரா (33) சற்று நிலைத்து ஆடினார்.

செல்சி, மான்செஸ்டர் சிட்டி இன்று பலப்பரிட்சை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ரசிகர்களுக்கு இன்று பின்னிரவு ருசிமிக்க ஆட்டம் ஒன்று காத்திருக்கிறது. லீக் தொடர் தொடங்கி சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில் செல்சி, மான்செஸ்டர் சிட்டி ஆகிய இரு முன்னணிக் குழுக்கள் இன்று பின்னிரவு ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. லீக் தொடரில் ஆறு ஆட்டங்கள் முடிந்த நிலையில் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது மான்செஸ்டர் சிட்டி. ஆறு ஆட்டங்களில் 21 கோல்களைப் போட்ட சிட்டி, லீக் பட்டியல் பந்தயத்தில் கடிவாளத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆஸி. வீரர்கள் பேருந்து மீது தாக்குதல்; இருவர் கைது

புதுடெல்லி: இந்தியா விற்கு எதிரான 20 ஓவர் தொடரின் 2வது போட்டியை வென்ற ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பேருந்தின் சன்னல் களைக் கல்லால் அடித்து நொறுக்கினர் கௌகாத்தி ரசிகர்கள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விளை யாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நம் நாட்டிற்கு வரும் வீரர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது நமது கடமையாகும்,” எனக் கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அஸ்வின், “விருந்தினர் களை உபசரிப்பதில் நாம் சிறந்தவர்கள்.

சுந்தரம்: எதிரணியைக் கடைசி நேரத்தில் ஒரு கோல் போடவிட்டது துரதிர்ஷ்டம்

சிங்கப்பூர்: துர்க்மெனிஸ்தான் குழுவிற்கு எதிரான ஆசியக் கிண்ணக் காற்பந்துத் தகுதி சுற்றுப் போட்டியில் சிங்கப்பூர் வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது என்று கூறியுள்ளார் அக்குழுவின் தலைமைப் பயிற்று விப்பாளர் வி.சுந்தரமூர்த்தி. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் துர்க்மெனிஸ்தான் குழுவிடம் 1=2 என்ற கோல் கணக்கில் தோற்றது சிங்கப்பூர். இப்போட்டியில் இர்ஃபான் பாண்டி 27வது நிமிடத்தில் சிங்கப்பூர் குழுவிற்கான ஒரே கோலைப் புகுத்தினார். இது அனைத்துலகப் போட்டியில் அவரது முதல் கோலாகும்.

ஆஸியின் கூடுதல் நேர கோல்; சிதைந்தது சிரியாவின் கனவு

படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: உலகக் கிண்ணக் காற்பந்திற்குள் நுழைய வேண்டும் என்ற சிரியாவின் கனவைத் தகர்த்தது ஆஸ்திரேலியா. இக்குழுக்கள் மோதிய தகுதிச் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது சுற்றுப் போட்டி நேற்று ஆஸ்திரே லியாவில் நடந்தது. ஏற்கெனவே சிரியாவின் சொந்த மண்ணில் நடந்த முதல் சுற்று ஆட்டம் 1=1 எனச் சம நிலையில் முடிந்தது. எனவே நேற்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. சிரியாவின் அல் சோமா 6வது நிமிடத்தில் புகுத்திய கோலால் அக்குழு முன்னிலைப் பெற்றது. அடுத்த சில நிமிடங்களிலேயே பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலியா.

வேல்ஸ் குழுவின் உலகக் கிண்ணக் காற்பந்து வாய்ப்பை பறித்தது அயர்லாந்து

வேல்ஸ்: வேல்ஸ் குழுவை வீழ்த்தி ‘பிளே ஆஃப்’ சுற்றுக்குத் தகுதி பெற்றது அயர்லாந்து குழு. இதனால் உலகக் கிண்ணக் காற்பந்திற்குள் நுழையும் வேல்ஸ் குழுவின் கனவு தவிடு பொடி யானது. தனது சொந்த மண்ணில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியை கட்டுக்குள் வைத்திருந் தது வேல்ஸ் குழு. ஆனால் எதிரணியின் தற்காப்பு ஆட்டத்தால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பிற்பாதி ஆட்டத்தின் போது அயர்லாந்து குழுவின் நம்பிக்கை அதிகரித்திருந்தது. வேல்ஸ் குழுத் தலைவர் ஆஷ்லே வில்லியம்சிடம் இருந்து ஜெஃப் ஹென்ரிக் தட்டிப் பறித்தப் பந்தைக் கோலாக மாற்றினார் மெக் கிளின்.

Pages