You are here

விளையாட்டு

‘இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் அனல் பறக்கும்’

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்

பெர்த்: இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று இருதரப்பினரும் அடித்துக் கூறுகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடை யிலான ஒருநாள் தொடர் பெர்த்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்தியாவிற்குச் சாதகமல்ல - ஜவகல் ஸ்ரீநாத்

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்

புதுடெல்லி: மிச்செல் ஸ்டார்க், கோல்ட்டர் நைல், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணிப் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாவிட்டாலும் அது இந்திய கிரிக்கெட் அணிக்குச் சாதகமாக இராது என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

சிறந்த வீரராக ஒபாமெயாங்

கபோன் நாட்டின் பியர் எமெரிக் ஒபாமெயாங்.

அபுஜா: கடந்த ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் கபோன் நாட்டின் பியர் எமெரிக் ஒபாமெயாங். மத்திய ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த மதிப்பு மிக்க விருதை வென்றிருப்பது இதுவே முதன்முறை.

ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவிற்காக விளையாடி வரும் 26 வயதான ஒபாமெயாங்கிற்கு 143 வாக்குகள் கிட்டின. நான்கு முறை இந்த விருதைக் கைப்பற்றிய பெருமைக் குரியவரான ஐவரி கோஸ்ட் நாட்டவரும் மான்செஸ்டர் சிட்டி குழு ஆட்டக்காரருமான யாயா டூரேவிற்கு 136 வாக்குகள் கிடைத்தன.

பதவி விலகினார் ஆம்லா

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதாக ஹசிம் ஆம்லா, 32, அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்ததைத் தொடர்ந்து உடனடியாக தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார் ஆம்லா.

இதையடுத்து, மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஏபி டி வில்லியர்ஸ் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். இவரே ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப் பிரிக்க அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி யின் தலைமைப் பொறுப்பேற்றார் ஆம்லா.

சிங்கப்பூரில் முன்னாள் லிவர்பூல் வீரர்

ஜெர்மைன் பென்னன்ட்

ஆர்சனல், லிவர்பூல் ஆகிய பிரபல இபிஎல் காற்பந்துக் குழுக்களின் முன்னாள் மத்திய திடல் ஆட்டக்காரரான ஜெர்மைன் பென்னன்ட் (வலது) சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நம்பிக்கையில் உள்ளார். நேற்றுக் காலை சிங்கப்பூர் வந்திறங்கிய அவர் மாலையில் அக்குழுவினருடன் பயிற்சியில் ஈடுபட்டார்.

சிட்டியைச் சாய்த்த எவர்ட்டன்

 வெற்றி கோலை முட்டும் லுக்காக்கு. படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்தின் அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நேற்று அதிகாலை எவர்ட்டன் குழுவும் மான்செஸ்டர் சிட்டி குழுவும் மோதின. இதில் எவர்ட்டன் குழுவின் ரொமேலு லுக்காக்கு வெற்றி கோலை போட்டு அடுத்த சுற்று ஆட்டத்தில் தமது குழுவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

எனினும், எவர்ட்டன் குழுவிற்கு தமது 19வது கோலை போட்ட லுக்காக் குவின் கோல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கோல் புகுந்த சமயம் அவர் ‘ஆஃப்சைட்’ நிலையில், அதாவது எதிரணியின் கடைசி ஆட்டக்காரருக் குப் பின்னால் இருந்தார் என்று கூறப் படுகிறது.

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கிறிஸ் கெயில்

கிறிஸ் கெய்ல்

சிட்னி: சிறந்த அதி­ரடி பந்த­டிப்­பா­ளர்­களில் ஒரு­வர் கிறிஸ் கெய்ல். வெஸ்ட் இண்­டீசை சேர்ந்த இவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்போர்னில் நடை­பெற்று வரும் பிக்­பாஷ் 20 ஓவர் போட்­டி­யில் விளை­யாடி வரு­கிறார். இந்தப் போட்­டி­யின் இடையே ஆஸ்­தி­ரே­லிய தொலைக்­காட்சி ஒன்­றின் பெண் நிரு­பர், மெக்­மெக்­லின் கெய்­லி­டம் பேட்டி எடுத்­தார். அப்­போது கிரிக்கெட் வீரர் கெய்ல், அவரைப் பேட்டி கண்ட அழகான பெண் நிருபரின் அழகை வர்ணித்த­தோடு அவரை மது விருந்துக்கும் அழைத்திருக்கிறார். கெய்லின் இந்தச் செய்கையால் செய்தியாளர் அதிர்ச்சிக் குள்ளானார். இதற்காக கெய்லுக்கு 7,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

லிவர்பூலுக்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்த ஜோர்டன்

இங்­கி­லாந்து: கேப்­பிட்­டல் ஒன் என்னும் லீக் கிண்ண இறு­திப்­போட்­டி­யில் பங்­கு­பெ­றும் பொன்னான வாய்ப்பை லிவர்­பூல் அணிக்­குப் பெற்­றுத் தந்­துள்­ளார் மாற்­றாக அந்த அணியில் சேர்ந்த ஆட்­டக்­கா­ரர் ஜோர்­டன் ஐப். மத்­திய இங்­கி­லாந்­தில் உள்ள பிரிட்­டா­னியா விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று கேப்­பிட்­டல் ஒன் கிண்­ணத்­திற்­கான முதல் சுற்று ஆட்டம் நடை­ பெற்­றது. அந்த ஆட்­டத்­தில் லிவர்­பூல் அணி, ஸ்டோக் சிட்டி அணி­யு­டன் பொரு ­தி­யது.

மூன்றில் வென்று தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

ஆக்லாந்து: இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 36 ஓட்ட வித்தியாசத்தில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரைத் தன தாக்கியது நியூசிலாந்து அணி. முதலிரு போட்டிகளில் நியூசி லாந்தும் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கையும் வென்றன. 4வது போட்டியை மழை கெடுத்தது. இத னால் தொடரைச் சமன் செய்ய கடைசி, ஐந்தாவது ஒருநாள் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருந்தது.

புதிய நிர்வாகியாக சிடான்

மட்ரிட்: பிரபல ஸ்பெயின் காற் பந்துக் குழுவான ரியால் மட்ரிட் டின் நிர்வாகியாக இருந்து வந்த ரஃபாயல் பெனிட்டேஸ் நீக்கப் பட்டு அவருக்குப் பதிலாக அக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரரும் பிரெஞ்சு காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைவருமான சினடின் சிடான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Pages