You are here

விளையாட்டு

5வது முறையாக விருது வென்ற மெஸ்சி

ஹியூஸ்டன் டேஷ் கார்லி லோய்ட்,லயனல் மெஸ்சி.

ஸுரிக்: அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத்தின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர் விருது (Ballon d’Or) விருதை பார்சிலோனாவின் லயனல் மெஸ்சி வென்றுள்ளார். இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்று மெஸ்சி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்த விருதை வென்றிருந்தார் மெஸ்சி. கடந்த ஆண்டு இந்த விருதை ரியால் மட்ரிட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றிருந்தார்.

ரொனால்டோவிடமிருந்த விருதை மெஸ்சி தட்டிப் பறித்துள்ளார். ரொனால்டோவுக்கு இம்முறை இரண்டாவது இடமே கிட்டியது. பார்சிலோனாவின் நெய்மார் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

ஆஸி. வெற்றி; ரோகித் சர்மா சதம் வீண்

பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி உள்ளது. பெர்த்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரனும், ஆஸ்திரேலிய அணியில் பாரிஸ், போலந்து ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அறிமுகமானார்கள்.

அணித் தலைவராக சேவாக்

துபாய்: வரும் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. மொத்தம் ஆறு அணிகள் இந்தப் போட்டித் தொடரில் களம் இறங்குகின்றன. அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுமார் 250 வீரர்கள் அந்த ஆறு அணிகளுக்காக விளை யாட இருக்கின்றனர்.

வெயின் ரூனியின் கோல்

மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் வெயின் ரூனி (நடுவில்).

லண்டன்: ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது மான்செஸ்டர் யுனைடெட்டுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி அணித் தலைவர் வெயின் ரூனி போட்ட கோல் அக்குழுவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. ரூனி இந்தக் கோலைப் போடாமல் இருந்திருந்தால் மூன்றாம் நிலை லீக்கில் விளை யாடும் ஷெஃபீல்ட் வெட்னஸ்டே குழுவுடன் சமநிலை கண்ட தலைக்குனிவுடன் யுனைடெட் ஆட்டக்காரர்கள் திடலைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

சிறப்பான பந்துவீச்சு; இந்தியா அபார வெற்றி

ரவிச்சந்திரன் அஸ்வின் (வலமிருந்து இரண்டாவது)

பெர்த்: மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதலில் பந்தடித்த இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் 249 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரோகித் சர்மா 67 ஓட்டங்களும் ரகானே 41 ஓட்டங்களும் மணீஷ் பாண்டே 58 ஓட்டங்களும் எடுத்தனர்.

வெற்றியாளர் கிண்ணம் வென்ற சானியா- ஹிங்கிஸ்

சானியா மிர்சா - ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பன் இண்டர்நேஷனல் டென்னிஸ் போட்டி நடை பெற்றது. நேற்று முன்தினம் நடை பெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இடத் தில் இருக்கும் இந்தியாவின் சானியா மிர்சா - ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி (படம்), ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்ஜலிக்யூ கெர்பர் - அன்ட்ரியா பெட்கோ விக் ஜோடியை எதிர்த்து விளை யாடியது. முதல் செட்டில் அனுபவம் வாய்ந்த சானியா ஜோடிக்கு ஜெர்மனி ஜோடி கடும் சவால் விடுத்தது.

போராடி தோல்வியைத் தவிர்த்த லிவர்பூல்

லண்டன்: பிற்பாதி ஆட்டத்தில் லிவர்பூலின் தற்காப்பு ஆட்டக்காரர் பிராட் ஸ்மித் புகுத்திய கோல் அக்குழுவைத் தோல்வியிலிருந்து காப்பாற்றி உள்ளது. நேற்று நடைபெற்ற இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் எக்ஸ்சிடர் குழுவுடன் மோதியது லிவர்பூல். நான்காவது நிலை லீக்கில் இருக்கும் எக்ஸ்சிடரை லிவர்பூல் மிக எளிதில் உதறித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல முன்னணி ஆட்டக்காரர்கள் காயம் காரணமாகக் களமிறங்காததால் மாற்று ஆட்டக்காரர்கள் பலரைக் கொண்டு ஆடியது லிவர்பூல்.

‘இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் அனல் பறக்கும்’

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்

பெர்த்: இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று இருதரப்பினரும் அடித்துக் கூறுகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடை யிலான ஒருநாள் தொடர் பெர்த்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்தியாவிற்குச் சாதகமல்ல - ஜவகல் ஸ்ரீநாத்

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்

புதுடெல்லி: மிச்செல் ஸ்டார்க், கோல்ட்டர் நைல், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணிப் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாவிட்டாலும் அது இந்திய கிரிக்கெட் அணிக்குச் சாதகமாக இராது என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

சிறந்த வீரராக ஒபாமெயாங்

கபோன் நாட்டின் பியர் எமெரிக் ஒபாமெயாங்.

அபுஜா: கடந்த ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் கபோன் நாட்டின் பியர் எமெரிக் ஒபாமெயாங். மத்திய ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த மதிப்பு மிக்க விருதை வென்றிருப்பது இதுவே முதன்முறை.

ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவிற்காக விளையாடி வரும் 26 வயதான ஒபாமெயாங்கிற்கு 143 வாக்குகள் கிட்டின. நான்கு முறை இந்த விருதைக் கைப்பற்றிய பெருமைக் குரியவரான ஐவரி கோஸ்ட் நாட்டவரும் மான்செஸ்டர் சிட்டி குழு ஆட்டக்காரருமான யாயா டூரேவிற்கு 136 வாக்குகள் கிடைத்தன.

Pages