You are here

விளையாட்டு

சொந்த கோலால் வெற்றி வாய்ப்பை இழந்த அயர்லாந்து குடியரசு

சொந்த கோலால் வெற்றி வாய்ப்பை இழந்த அயர்லாந்து குடியரசு

பாரிஸ்: அயர்லாந்துக் குடியரசின் கியரன் கிளார்க் தமது அணிக்கு எதிராக சொந்த கோல் போட்டதால் சுவீடனுடன் நேற்று மோதிய அந்த அணி வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகில் உள்ள ஸ்டேட் டி பாரிஸ் என்ற திடலில் நடை பெற்ற இந்த ஆட்டத்தின் 48ஆம் நிமிடத்தில் வெஸ் ஹூலாஹன் சுவீடனுக்கு எதிராக கோல் போட்டு தமது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

எவர்ட்டனின் புதிய நிர்வாகி கூமன்

லண்டன்: எவர்ட்டன் குழுவின் புதிய நிர்வாகியாக ரோனல்ட் கூமன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தற்பொழுது உள்ள செளத்ஹேம்டன் குழு அவரை விடுவித்ததை அடுத்து அவர் எவர்ட்டனுக்கு வந்துள்ளார்.

பிரேசிலை வெளியேற்றிய பெருவின் கோல்

எதிரணியின் வலைக்குள் பெரு வீரர் புகுத்திய பந்தை நடுவர் கோல் என்று உறுதிப்படுத்தியதால் ஏமாற்றமடைந்த பிரேசில் ஆட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

ஐந்து முறை உலகக் கிண்ண வெற்­றி­யா­ள­ரான பிரேசிலை யூரோ காற்­பந்து தொடரிலிருந்து வெளி­யேற்­றி­யது சர்ச்சையை உண்டாக்­கிய பெருவின் கோல். கிட்­டத்­திட்ட 30 ஆண்­டு­களுக்­குப் பிறகு, காலி­று­திக்­கு­க்கூட முன்­னே­றா­மல் குழுக்­களுக்­கிடை­யி­லான ஆட்­டத்­தி­லேயே பிரேசில் நடைகட்டியது இதுவே முதல் முறை­யா­கும். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் பிரேசிலை வீழ்த்த முடியாத பெரு, நேற்று நடந்த ஆட்­டத்­தில் 1-0 என்ற கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது.

ஜெர்மனியிடம் வீழ்ந்த உக்ரேன்

யூரோ கிண்ணக் காற்பந்துத் தொடரில் உக்ரேனுடன் மோதிய ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே மூன்று முறை யூரோ கிண்ணத்தை வென்றுள்ள ஜெர்மனி நான்காவது முறையாக அக்கிண்ணத்தைக் கைபற்றும் எண்ணத்தோடு இத்தொடரில் முதல் ஆட்டத்தை ஆடியது. ஜெர்மனியின் டோனி குரூஸ் கடத்திய பந்தை தலையால் முட்டி 19வது நிமிடத்தில் கோலாக்கினார் முஸ்தாபி. உக்ரேன் அணியினர் பலமுறை கோல் போட முயன்றனர். ஆனால், அவர்களை கோலடிக்கவிடாமல் சிறப்பாக தடுத்தாடினார் ஜெர்மனியின் கோல்காப்பாளர் மேனுவெல்.

‘இங்கிலாந்து, ரஷ்யா அணிகள் வெளியேற்றப்படும்’

ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் இங்கிலாந்து, ரஷ்யா அணிகள் வெளியேற்றப்படும் என்று ஐரோப்பிய காற்பந்து கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூரோ காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து-ரஷ்யா இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. மைதானத்திற்குள்ளேயும் வெளியேயும் இங்கிலாந்து, ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஸிம்பாப்வேயை வென்ற இந்தியா

ஹராரே: ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது இந்தியா. இதனால், 2014ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய பிறகு டோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வென்றதில்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பூவா தலையா வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. முதல் 10 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸிம்பாப்வே, 23.2 ஓவரில்தான் 100 ஓட்டங்களை எட்டியது.

கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது அமெரிக்கா

கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது அமெரிக்கா

‘கோப்பா அமெரிக்கா’ காற்பந்து இறுதிச் சுற்றுப் போட்டியை ஏற்று நடத்தும் அமெரிக்கா ஒருவழியாக அப்போட்டித் தொடரின் கால் இறுதிப் போட் டிக்குத் தகுதி பெற்று விட்டது. அதுவும் தன்னைக் கடுமை யாக எதிர்த்து ஆடிய பராகு வேயை 1-=0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு அத் தகுதியைப் பெற்றது. சனிக்கிழமை இரவு பென் சில்வேனியா லிங்கன் திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே வெற்றியைச் சுவைத்திட பராகுவே கடுமை யாகப் போராடியது.

இங்கிலாந்து- ரஷ்ய ரசிகர்கள் மோதல்

இங்கிலாந்து- ரஷ்ய ரசிகர்கள் மோதல்

யூரோ 2016 காற்பந்து போட்டியில் வெற்றி தோல்வியின்றி முடிந்த இங்கிலாந்து, ரஷ்யா ஆட்டத் திற்குப்பிறகு வன்முறை வெடித் தது. இரு அணிகளும் முதல் போட்டியில் மோதிய முதல் நாளி லேயே இங்கிலாந்து ரசிகர்கள் போலிசாருடனும் எதிரணி ஆதர வாளர்களுடனும் கைகலப்பில் ஈடு பட்டனர்.

ரூனியின் மாற்றம் காரியத்தை கெடுத்தது

வெயின் ரூனி, ராய்ட்டர்ஸ்

மார்சே: நேற்று அதிகாலை இங்கிலாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்ற யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் வெயின் ரூனியை மாற்றியது இங்கிலாந்து வெற்றி பெற முடியாத நிலைக்கு வழி வகுத்துள்ளதாக காற்பந்து விமர்சகர்கள் காட்ட முடன் கூறுகின்றனர். ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத் தில் ஆட்டநாயகனாக மத்திய திடல் பகுதியிலிருந்து சக வீரர்களுக்கு பந்தை லாவகமாக அனுப்பி இங்கிலாந்து விளை யாட்டுக்கு உயிரூட்டி வந்த ரூனியை ஒரு கோல் முன்னிலை பெற்றபோது மாற்றி அவருக்கு பதிலாக ஜேக் வில்‌ஷியர் என்ற வீரரைக் களமிறக்கினார் இங் கிலாந்து நிர்வாகியான ரோய் ஹோட்சன்.

கடைசி நேர ஜாலம்; பிரான்ஸ் வெற்றி

 டிமிட்ரி பயெட் (இடது). படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் டிமிட்ரி பாயெட் போட்ட அபார கோலால் ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் வெற்றி யைச் சுவைத்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணிக்கு ருமேனி யாவை எதிர்த்து பிரான்ஸ் களமிறங்கியது. அண்மையில் பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாகப் விளையாட்டரங்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

Pages