You are here

விளையாட்டு

‘வழக்கு தொடுப்பேன்’

காற்பந்து வீரர் மெஸ்ஸி

காற்பந்து வீரர் மெஸ்ஸி சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ஸ்பானிய நாளிதழ் மீது வழக்கு தொடுக்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளார். அவர் தனது உருவப்படத்தைப் பயன்படுத்தும் காப்புரிமைக்காக பெறப்பட்ட தொகைக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மெஸ்ஸி, அவரது தந்தை ஜோர்ஜ் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட ஆவணங்களும் அடங்கும்.

‘வெற்றி பெறுவோம் என யாரும் நம்பவில்லை’

‘வெற்றி பெறுவோம் என யாரும் நம்பவில்லை’

கோல்கத்தா: பல தடைகளைத் தாண்டி வெற்றியை எட்டியதாகக் கூறினார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணித்தலைவர் டேரன் சமி. டி20 உலகக் கிண்ணம் வென்றதைப் பற்றி பேசிய சமி, “நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாருமே நம்பவில்லை. எங்கள் கிரிக்கெட் வாரியம் எங்களை அவமதித்தது. சீருடை பெறுவதற்குக்கூட நாங்கள் கடுமையாக போராட வேண்டி இருந்தது. “இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் எங்களை மூளை இல்லாதவர் என்று கூறினார். “எங்கள் அணியில் அனை வரும் வெற்றியாளர்தான்,” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

பதவி விலகினார் ஷாகித் அஃப்ரிடி

பதவி விலகினார் ஷாகித் அஃப்ரிடி

கராச்சி: பாகிஸ்தான் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அப்ஃரிடி தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணித்தலைவராக உள்ளார் அவர். நடப்பு டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. முக்கியமாக அப்ரிடியின் தலைமை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

பார்சிலோனாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ

இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

பார்­சி­லோனா: ஸ்பானிய லீக் காற்­பந்தாட்­டத் தொடரில் 39 ஆட்­டங்க­ளாக பார்­சி­லோனோ பெற்று வந்த தொடர் வெற்­றிகளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்தது ரியால் மட்ரிட். நீண்ட நேரத்­திற்­குப் பிறகு, 56வது நிமி­டத்­தில் ஆட்­டத்­தின் முதல் கோல் விழுந்தது. பார்­சி­லோனா­வின் பிக்கே அந்த கோலை அடித்தார். அந்த கோலை 62வது நிமி­டத்­தில் சமன் செய்தார் கரீம் பென்சிமா. இப்­ப­ரு­வத்­தில் ஸ்பா­னி­ய லீக்கில் இதுவரை 21 கோல்களை அடித்­துள்­ளார் கரீம் பென்சிமா. இவர் கோல் கணக்கில் முதல் நிலையில் இருக்­கும் ரொனால்­டோவை­விட எட்டு கோல்கள் பின்­தங்­கி­யுள்­ளார்.

வாய்ப்பைத் தவறவிட்டது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்

வாய்ப்பைத் தவறவிட்டது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்

லண்டன்: இங்­கிலிஷ் பிரி­மியர் லீக் காற்­பந்தாட்­டத் தொடரின் லீக் பட்­டி­ய­லில் இரண்டா­வது நிலையில் இருக்­கும் டோட்டன்ஹம், லிவர்­பூல் குழு ­வு­டனான நேற்றைய ஆட்­டத்தை சமனில் முடித்­தது. அதனால், பட்­டி­ய­லில் முதல் நிலையில் இருக்­கும் லெஸ்டர் குழு­வுக்கு நெருக்­க­டியை அதி­க­ரிக்­கும் வாய்ப்பைத் தவறவிட்டது டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்பர். ஸ்பர்ஸ் குழுவின் கோல் காப்­பா­ளர் ஹூகோ லோரிஸ், லிவர்­பூல் வீரர்­கள் போட முயன்ற 4 கோல்­களைச் சிறப்­பாக தடுத்து ஆடி­ய ­தால் ஆட்டம் வெற்றி தோல்­வி­யின்றி சம­நிலை­யில் முடிந்தது.

ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் பாய்மரப் படகோட்ட வீரர்கள்

ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் பாய்மரப் படகோட்ட வீரர்கள்

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குச் சிங்கப்பூரைச் சேர்ந்த பாய்மரப் படகோட்ட வீரர்கள் நால்வர் தகுதி பெற்றுள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்ற பாய்மரப் படகோட்டப் போட்டிக்கான பெண்கள் பிரிவில் கிரிசெல்டா கெங்கும் சாரா டானும் (படம்) 11வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வாய்ப்பைத் தட்டிச் சென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜஸ்டின் லியூவும் டெனிஸ் லிம்மும் 20வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றனர்.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆக்டிவ் எஸ்ஜி பயிற்சியகம்

இளம் காற்பந்தாட்டக்காரர்களுடன் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்).

தொடக்கப் பள்ளி மாணவர்களுக் கான புதிய ஆக்டிவ் எஸ்ஜி பயிற்சியகம் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, பயிற்சியகத்தின் முதல்வரான அலெக்சாண்டர் டூரிச் ஆகியோ ரால் ஜூரோங் ஈஸ்ட் விளையாட் டரங்கத்தில் நேற்றுக் காலை திறக்கப்பட்டது. விளையாட்டுத் துறைக்கான தேசிய இயக்கமான ஆக்டிவ் எஸ்ஜியின் ஆதரவோடு இந்தப் பயிற்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

கடைசி நிமிட கோலால் கேலாங் வாரியர்ஸ் சமநிலை

கடைசி நிமிட கோலால் கேலாங் வாரியர்ஸ் சமநிலை

மாற்று ஆட்டக்காரர் ரித்வான் முகம்மது போட்ட கோல் (படம்) கேலாங் இன்டர்நேஷனல் குழுவின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது. கேலாங்குக்கும் வாரியர்ஸ் எஃப்சி குழுவுக்கும் நேற்று முன்தினம் நடைபெற்ற எஸ்=லீக் காற்பந்து ஆட்டம் 2-=2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் வாரியர்ஸ் குழு கோல் போட்டு முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் கேலாங்கின் கையோங்கியது. 51வது நிமிடத்தில் ஆட்டத்தைச் சமப்படுத்திய கேலாங், ஆட்டம் முடிய கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருந்தபோது இரண்டாவது கோலைப் போட்டது.

‘செல்லாப் பந்துகளால் வெல்லாது போனோம்’

 வெஸ்ட் இண்டீஸ் அணியினர். படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: சொந்த மண்ணில் 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி வெற்றியாளராக வாகை சூடியது. தொடரை ஏற்று நடத்திய நாடு கிண்ணத்தை வென்றது இதுவே முதன்முறை. அதே போன்றதொரு சாத னையை டி20 உலகக் கிண்ணத் திலும் நிகழ்த்தும் ஆவலுடன் இருந்த இந்திய அணிக்குக் களமும் காலமும் கைகொடுத்தது. ஆனாலும், எதிர்பாராத சில தவறு களால் அத்தகையதொரு பொன் னான வாய்ப்பை அந்த அணி கோட்டைவிட்டது.

2019 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட டோனி விருப்பம்

செய்தியாளரை மேடைக்கே வரச் செய்து அவர் வாயிலிருந்தே பதிலை வரவழைத்த டோனி. காணொளிப்படம்

நடப்பு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியபோதும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் வரையிலும் விளையாட விரும்புவதாக சூசகமாகத் தெரிவித்து இருக்கிறார் இந்திய அணித் தலைவர் டோனி. அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றபிறகு செய்தியாளர்களை டோனி சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலிய செய்தியாளர் ஒருவர், “எம் எஸ், எல்லாமே சாதித்துவிட்டீர்கள். இனியும் தொடர்ந்து விளையாடுவீர்களா?” என்று அவரிடம் கேட்டார்.

Pages