You are here

விளையாட்டு

செல்சி அதிர்ச்சி தோல்வி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் நடப்பு வெற்றியாளரான செல்சி இந்த பருவத்தின் முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவி யது. தனது சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் பர்ன்லியை எதிர்கொண்ட செல்சியின் தோல் விக்கு அதன் விளையாட்டாளர்கள் இருவர் சிவப்பு அட்டை பெற்றது தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் முதல் பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல் களையும் போட்டுவிட்டது பர்ன்லி. அதேசமயம் கோல் எதுவும் போடுவதற்கு முன்னாலேயே அதா வது 14வது நிமிடத்திலேயே ஸ்டீவன் டிஃபோருடன் மோதலில் ஈடுபட்டதால், செல்சி குழுத் தலைவர் கேரி கேஹில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.

போராடி வென்ற ஆர்சனல்

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தின் முதல் போட்டியில் ஆர்சனல் குழுவிற்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிட்டி விடவில்லை. நேற்று அதிகாலை லெஸ்டர் சிட்டி குழுவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டு இருந்த ஆர்சனல் குழுவிற்கு வெற்றியைத் தேடித் தந்தார் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஒலிவியர் ஜிரூட். ஆட்டத்தில் முதல் கோலைப் போட்டது என்னவோ ஆர்சனல் குழுதான். புதிய வரவான லக்காஸெட் 2வது நிமிடத்திலேயே கோலடித்தார்.

ஒரே ஓவரில் ஆறு விக்கெட்; இங்கிலாந்து சிறுவன் சாதனை

சாதனைச் சிறுவன் லூக் ராபின்சன். படம்: இணையம்

லண்டன்: எதிரணியின் ஆறு விக் கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் லூக் ராபின்சன் என்ற இங்கிலாந்துச் சிறுவன். இங்கிலாந்து நாட்டின் வட கிழக்குப் பகுதியில் உள்ள பில டெல்பியா கிரிக்கெட் குழு சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் லூக் ராபின்சன் என்ற 13 வயது சிறுவன் 6 பந்துகளில் 6 விக்கெட் டுகளைச் சாய்த்தார். அதிலும் அனைத்து விக்கெட்டுகளும் ‘கிளீன் போல்டு’ என்பதுதான் இதில் தனிச்சிறப்பு. மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் லூக்கின் தந்தை ஸ்டீபன்தான் இந்தப் போட்டியின் நடுவர்.

ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ்: பிலிஸ்கோவா தோல்வி

ஒட்டாவா: ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகள் கனடா வில் கடந்த 7ஆம் தேதி தொடங்கின. ஆடவர் பிரிவுப் போட்டிகள் மாண்ட்ரியல் நகரிலும் பெண் கள் பிரிவு போட்டிகள் டொரோன்டோ நகரிலும் நடை பெற்று வருகின்றன. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் நிலையில் உள்ள பிலிஸ்கோவா, ஆறாம் நிலை வீராங்கனையான வோஸ் னியாக்கியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வோஸ்னியாக்கி 7-5, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் பிலிஸ்கோவாவை வீழத்தினார்.

‘ஹாட்ரிக்’ வெற்றி நம்பிக்கையில் இந்தியா

பல்லகெலே: இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்ல கெலேயில் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹாட்ரிக்’ சாதனை புரியும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின் றனர். விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருந்தது.

மகிழ்ச்சியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அந்தோணி தாஸ்

நத்தம்: தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சைத் தோற்கடித்தது. வேகப்பந்து வீச்சாளரான 28 வயதான அந்தோணி தாஸ் பந்தடிப்பிலும் ஜொலித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். “கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நான் ஆட்டநாயகன் விருது வாங்கினேன். ஆனால் அது சிறந்த பந்து வீச்சுக்காக. இந்த முறை பந்தடிப்பிற்காக பெற்றிருப்பதை சிறப்பானதாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியான தருணமாகும்.

ஆர்சனல்-லெஸ்டர் சிட்டி மோதல்

லண்டன்: கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளிக்குப் பின் காற்பந்து உலகம் மீண்டும் களைகட்டவிருக்கிறது. காற்பந்து ரசிகர்களின் மனங்கவர்ந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் புதிய பருவம் இன்றிரவு 2.45 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. முதல் ஆட்டத்தில் 2015-=16 பருவத்தின் வெற்றியாளரான லெஸ்டர் சிட்டியும் கடந்த 12 பருவங்களாகப் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வரும் ஆர் சனல் குழுவும் பொருதுகின்றன. நடப்பு வெற்றியாளரான செல்சி குழுவை வீழ்த்தி சமூகக் கிண் ணத்தை வென்ற உற்சாகத்துடன் இருக்கும் ஆர்சனல் குழு, இம் முறை பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படு கிறது.

லிவர்பூல் பிடிவாதம்

பார்சிலோனா: பிரபல பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் பிஎஸ்ஜி குழுவுக்குச் சென்று விட்ட நிலையில் அவருக்கு மாற்றாக இன்னொரு பிரேசில் வீரர் கொட்டீனியோவை ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா குழு முயன்று வருகிறது. ஆனால், அவரை விற்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று லிவர்பூல் குழு தொடர்ந்து மறுத்து வருகிறது. கொட்டீனியோவுக்காக 80 மில்லியன் யூரோவைத் தரத் தயாராக இருந்த பார்சிலோனா, இப்போது அந்தத் தொகையை 100 மி. யூரோவாக உயர்த்தி இருக்கிறது. ஆனாலும், லிவர்பூல் மசியவில்லை என்று பிரிட்டிஷ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் அனைத்துலக விமானத் துறை நிறுவனமான சிஏஇ உடன் இணைந்து தனது இரண்டாவது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கடினமான செயல்பாட்டுச் சூழலைச் சமாளிக்க பல புதிய தொழில்களில் எஸ்ஐஏ கால் பதித்து வருகிறது. அவற்றில் ஆக அண்மைய மேம்பாடு இது. எஸ்ஐஏ அதன் முதல் விமானி பயிற்சிப் பள்ளியை ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஏப்ரல் 2016ஆம் ஆண்டு சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்கில் தொடங்கி யது.

மொரின்யோவின் கனவை சிதைத்த ரியால் மட்ரிட்

படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்கோப்பியா: ஸ்பானிய காற் பந்துக் குழுவான ரியால் மட் ரிட் நான்காவது முறையாக யூஃபா சூப்பர் கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்று அதிகாலை நடந்த இப்போட்டியில் சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியால் மட்ரிட் குழுவும் யூரோப்பா லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் சூப்பர் கிண்ணத்திற்காக மல்லுக்கட் டின. இதில் தொடக்கம் முதலே ரியால் மட்ரிட் குழு ஆதிக்கம் செலுத்தியது. 24வது நிமிடத்தில் கேஸ் மிரோ, மட்ரிட் குழுவிற்கான முதல் கோலைப் புகுத்தினார். முதல் பாதி ஆட்டத்தில் விழுந்த ஒரே கோல் இது.

Pages