You are here

விளையாட்டு

கவுன்டி போட்டிகளில் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (படம்) முதல் முறையாக கவுன்டி போட்டிகளில் விளையாடவுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் அஸ்வின். இந்த நிலையில், அந்த அணிக் கெதிராக அடுத்து நடக்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.

மீண்டும் முதலிடத்தில் நடால்

சின்சினாட்டி: டென்னிஸ் உலகத் தரவரிசையில் மூன்றாண்டுகளுக் குப் பின் முதலிடத்தில் அமர்கிறார் ஸ்பெயினின் ரஃபாயல் நடால். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று முன்தினம் தொடங் கிய வெஸ்டர்ன் & சதர்ன் ஓப்பன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, இம்மாதம் 21ஆம் தேதி வெளியாகவுள்ள தரவரிசைப் பட்டியலில் நடால் முதலிடத்திற்கு முன்னேறுவது உறுதியாகி இருக்கிறது.

ரொனால்டோவிற்குத் தடை

மட்ரிட்: சிவப்பு அட்டை காட்டி தன்னை வெளியேற்றிய நடுவரைக் கையால் தள்ளியதற்காக ரியால் மட்ரிட் காற்பந்துக் குழு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஐந்து ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பந்து: சிங்கப்பூர் வெற்றித் தொடக்கம்

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை சிங்கப்பூர் மகளிர் நீர்ப்பந்துக் குழு வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூர்க் குழு நேற்று தனது முதல் ஆட்டத்தில் 7=6 என்ற கோல் கணக்கில் இந்தோனீசியாவை வென்றது. இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மலேசிய வீராங்கனைகளை சிங்கப்பூர் மகளிர் எதிர்கொள்கின்றனர். 2011ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் தங்கம் வென்ற சிங்கப்பூர்க் குழு, 2015ல் தாய்லாந்திடம் தங்கத்தை இழந்தது. 2013 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீர்ப்பந்தாட்டம் சேர்க்கப்படவில்லை.

வெற்றிபெறத் தடுமாறி வரும் சிங்கப்பூர் U-22 காற்பந்துக் குழு

சிலாங்கூர்: எதிர்மறை விமர்சனங் கள் 22 வயதுக்குட்பட்ட சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் செயல்பாட் டைப் பாதித்திருப்பதாக தற்காப்பு ஆட்டக்காரர் இர்ஃபான் ஃபாண்டி தெரிவித்துள்ளார். இம்மாதம் 19ஆம் தேதி கோலா லம்பூரில் தென்கிழக்காசியப் போட் டிகள் தொடங்கவுள்ளன. இருந் தாலும் காற்பந்து போன்ற குழு விளையாட்டுகளில் சில முன்ன தாகவே தொடங்கிவிட்டன. அந்த வகையில், காற்பந்துப் போட்டிகளில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சிங்கப்பூர்க் குழு, நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் 0=2 என்ற கோல் கணக்கில் மியன்மாரிடம் மண் ணைக் கவ்வியது.

மேன்யூ கோல் மழை; சுருண்டது வெஸ்ட் ஹேம்

படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இந்தப் பருவத் துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான்செஸ்டர் யுனைடெட் அபாரமான முறையில் தொடங்கி வைத்துள்ளது. வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் மழை பொழிந்த யுனைடெட் 4=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. யுனைடெட்டுக்கான இங் கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் முதல்முறையாகக் களமிறங்கிய ரொமேலு லுக்காகு சொந்த ரசிகர்களுக்கு முன்பு அதிரடியாக விளையாடி இரண்டு கோல்களைப் போட்டார். ஆட்டத்தின் 33வது நிமிடத் திலும் 52வது நிமிடத்திலும் அவர் போட்ட கோல்கள் வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரர்களைக் கதி கலங்க வைத்தது.

பார்சிலோனாவை முறியடித்த ரியால் மட்ரிட்

பார்சிலோனா: ஸ்பானிய சூப்பர் கிண்ண காற்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ரியால் மட்ரிட் 3=1 எனும் கோல் கணக்கில் பார்சிலோனாவைத் தோற்கடித் துள்ளது. ஆட்டத்தின் பிற்பாதியில் களமிறங்கினார் ரியாலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பத்து நிமிடங்கள் எஞ்சியிருந்த போது அவர் கோல் போட்டு ரியாலுக்கு 2=1 எனும் கோல் கணக்கில் முன்னிலையைப் பெற்றுத் தந்தார். ஆனால் சிறிது நேரத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இரண்டாவது ஆட்டம் வரும் வியாழனன்று நடைபெறும்.

தென்கிழக்காசிய விளையாட்டு - காற்பந்து: சிங்கப்பூர் தோல்வி

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அதன் முதல் காற்பந்து ஆட்டத்தில் சிங்கப்பூர் நேற்று மாலை தோல்வியைத் தழுவியது. சிலாயாங் விளையாட்டரங் கத்தில் மியன்மாரைச் சந்தித்த சிங்கப்பூர் 2=0 எனும் கோல் கணக்கில் வீழ்ந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களும் கோல் போடும் முனைப்புடன் இருந்தன. இருப்பினும், இரு குழுக்களின் தற்காப்பு அரண்கள் பிடிவாதமாக இருக்க முதல் பாதி ஆட்டம் கோல் ஏதும் இன்றி முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இடைவேளைக்கு சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்த போது மியன்மாரின் முதல் கோல் புகுந்தது.

விடைபெறும் வேளையில் வீழ்ந்தார்

உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் என்ற சாதனைச் சிகரத்தைத் தொட்ட உசேன் போல்ட் ஓய்வுபெறும் முன்னர் சாதிக்கத் தவறிவிட்டார். லண்டனில் நடந்த உலக திடல்தட வெற்றியாளர் கிண்ணப் போட்டி யில் ஓடும்போது தடுமாறி கீழே விழுந்ததால் வெற்றி பறிபோனது. படம்: ஏஎஃப்பி

இலங்கையைப் பந்தாடியது இந்திய அணி

பல்லகெலே: இலங்கை கிரிக்கெட் அணியை முதல் இன்னிங்சில் 135 ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்திய அணி. கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இலங்கையின் அனைத்து விக்கெட் டுகளையும் கைப்பற்றியது இந்தியா. குல்திப் யாதவ் 4 விக்கெட்டு களையும் சமி, அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணித் தலைவர் சந்திமால் அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 352 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இலங்கை ‘பாலோ-ஆன்’ ஆனது.

Pages