You are here

திரைச்செய்தி

விஷால்: என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின்

‘துப்பறிவாளன்’ படத்தின் ஒரு காட்சியில் விஷால், பிரசன்னா.

‘துப்பறிவாளன்’ திரைப்படம் தனக்காக இல்லை என்றாலும் அதில் நாயகனாக நடித்துள்ள விஷாலுக்காகவாவது வெற்றி பெற வேண்டும் என்கிறார் இயக்குநர் மிஷ்கின். இவர் இயக்கி உள்ள இப்படத்தில் அனு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின், ‘துப்பறிவாளன்’ காசுக்கு பின்னால் ஓடுகிற மனிதர் களைப் பற்றிய கதை என்றார். “ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர ஒரு துப்பறி வாளன் நடத்தும் போராட்டம்தான் இந்தக் கதை.

நிவின பாலிக்கு ஜோடியான அமலா

அமலா பால்.

சத்தமில்லாமல் புதுப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அமலா பால். தற்போது அவர் பெரிதும் எதிர்பார்த்திருப்பது தனு‌ஷுடன் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’, அரவிந்த் சாமியுடன் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களைத் தான். இந்நிலையில் நிவின் பாலியுடன் மலையாளப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் அமலா. ‘காயாம்குளம் கொச்சுன்னி’ என்ற தலைப்பில் உருவாகி வரும் அப்படத்தை ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் ‘மிலி’ என்ற படத்தில் நடித்திருந்தார் அமலா. தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்புதிய படத்தில் ராபின் ஹுட் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நிவின்.

காதல் காட்சிகள் அறவே இன்றி உருவாகும் ‘டிக் டிக் டிக்’

ஜெயம் ரவி

‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. இந்தப் படத்தில் காதல் காட்சிகள் அறவே இல்லையாம். இந்தியாவின் முதல் விண் வெளிக் கதையாக உருவாகி வரும் இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வித்தியாசமான திரைக்கதை யுடன் படத்தை இயக்கியுள்ள சக்தி சவுந்தர்ராஜன், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வை, படத்திலும் அவரது மகனாகவே அறிமுகப்படுத்துகிறார்.

பாதியில் வெளியேறிய தனுஷ்

தனுஷ்

அண்மைய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கடும் கோபமடைந்த தனுஷ், பாதியில் வெளி யேறியுள்ளார். ஹைதராபாத் சென்றிருந்த தனுஷை, உள்ளூர் தொலைக்காட்சிக்காக பேட்டி கேட்டுள் ளனர். அதற்கு ஒப்புக் கொண்ட அவரிடம், வழக்கமான கேள்விகளே தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டன. அவரும் இயல்பாக பதில்களை வழங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென கேள்விகள் தடம் மாறினவாம். பின்னணிப் பாடகி சுசித்ரா சில நாட்களுக்கு முன் தனுஷ் குறித்து விமர்சித்தது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார் பேட்டி கண்டவர். இதனால் தனுஷ் அதிர்ச்சி அடைந்தாராம்.

கிண்டல் செய்யும் சுவரொட்டி வெளியீடு

 ஆன்ட்ரியா

ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தரமணி’ எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைகாண உள்ளது. இதில் ஆன்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து தணிக்கைக் குழுவை மறைமுகமாக கிண்டல் செய்து படக்குழுவினர் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “ஆண் ‘ரா’வாக மது அருந்தினால் ‘யு/ஏ’, பெண் ‘ரா’வாக அருந்தினால் ‘ஏ’! ஆக, ‘தரமணி’ படம் ‘ஏ’,” என்று சுவரொட்டியில் குறிப்பிட்டு, தணிக்கைக் குழுவை மறைமுகமாக படக்குழு கிண்டல் செய்துள்ளது.

இலியானா தரும் ஆலோசனைகள்

இலியானா

எதைச் செய்தால் பதற்றம் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று தெள்ளத் தெளிவாகப் பட்டியலிடுகிறார் இலியானா. அம்மணிக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது தெரியவில்லை. ஆனால் காதலர் ஆண்ட்ரூவுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார். அண்மையில் ஃபிஜி தீவுக்குச் சென்றிருந்தாராம். அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டதன் மூலம் உயரத்தைக் கண்டு பயப்படும் போக்கு மாறிவிட்டதாம். “நம்முடைய பெரும்பாலான நேரத்தை நாம் பார்க்கக்கூடிய பல்வேறு பணிகளே விழுங்கி விடுகின்றன. கால நேரத்தை நமக்காகவும் சில சமயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆண்டனி படத்தில் சுனைனா

சுனைனா

முதன்முறையாக விஜய் ஆண்ட னியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சுனைனா. இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். ‘காளி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு மூன்று ஜோடிகளாம். அவர்களில் ஒருவராக சுனைனாவை முதலில் ஒப்பந்தம் செய்துள்ளனர். “நான் நடிக்க வந்த புதிதில் ‘காதலில் விழுந்தேன்’ படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத் தார். அன்று அவர் இசையில் நடித்தவள், இப்போது அவருட னேயே ஜோடி சேர்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் மகிழ்ச்சி யாக உள்ளது,” என்கிறார் சுனைனா. இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவ னமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார்.

முதல் படத்திலேயே ஆதி தனி முத்திரை

ஆதி. விஜயலட்சுமி.

‘மீசைய முறுக்கு’ படத்தில் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் ஆதி. கதாநாயகி விஜயலட்சுமி. இயக்கம், இசை, நடிப்பு என முக்கிய மூன்று துறைகளையும் கையில் எடுத்துள்ளார். இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை, பெற்றோர்களின் கனவு, காதலை சுமக்கும் சாதி உள்ளிட்ட பல விஷயங்களையும் ஜாலியாக சொல்லியிருக்கிறார் ஆதி. அத்துடன் பல புதுமுகங்களுக்கும் வாய்ப்புகளையும் அளித்துள்ள ‘மீசைய முறுக்கு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக முதல் படத்திலேயே இயக்குநராகவும் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார் ஆதி என்று சொல்கின்றனர்.

சண்டை காட்சியில் வாள் குத்தியது; கங்கனாவுக்கு அறுவை சிகிச்சை

நடிகை கங்கனா ரணாவத் சண்டை காட்சியில் நடித்தபோது அவரது நெற்றியில் வாள் குத்தி யதால் படுகாயம் அடைந்தார். இதன் கார ணமாக அவரது நெற்றியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. ‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர் கள் மத்தியில் புகழ்பெற்றவர் கங்கனா ரணா வத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகி யாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்த தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை யும் பெற்றார். தற்போது ஜான்சிராணி வர லாற்றை மையமாக வைத்து தயாராகும் ‘மணி கர்னிகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போதை விவகாரம்: புலம்பும் சார்மி

போதைப் பொருள் விவகாரத்தில் பலர் சிக்கி இருப்பது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. போதைப் பொருள் கும்பலுடன் தெலுங்குப்பட முன்னணி நடிகர்கள் நவ்தீப், தருண் நடிகைகள் சார்மி, முமைத்கான் இயக்குநர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பூரி ஜெகன்னாத்திடம் போலிசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் மூலம் தன் திரையுலக வாழ்க்கையே சீரழிந்துள்ளதாக அவர் புலம்பி உள்ளார். இந்நிலையில் அடுத்தகட்டமாக நடிகை சார்மியிடம் விசாரணை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pages