You are here

திரைச்செய்தி

கோடி கொடுத்தாலும் பேர் வாங்க முடியுமா எண்கிறார் ஐஸ்வர்யா ராஜே‌ஷ்

ஐஸ்வர்யா ராஜே‌ஷ்

‘காக்கா முட்டை’க்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜே‌ஷுக்கு கோடம்பாக்கத்தில் தனி மதிப்பே வந்துவிட்டது. தினந்தோறும் புதுமுக இயக்குநர்களும் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களும் நல்ல கதைகளுடன் அவரை அணுகிய வண்ணம் உள்ளனர். வெற்றி நாயகி எனப் பெயர் எடுத்துவிட்டாலும்கூட, இன்றளவும் குறும்படங்களில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா தயங்குவதில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் குறும்படங்கள்தான் திறமைசாலிகளை அடையாளம் காட்டுவதாக உறுதியாக நம்புகிறாராம். சம்பளத்தை விட கதாபாத்திரமே முக்கியம் என்று குறிப்பிடும் அவர், ரசிகர்களின் பாராட்டு என்பது ஊதியத்தையும் விட மிக உயர்வானது என்கிறார்.

ராஜா குரலில் ஒலிக்கப் போகும் சிம்பு படப் பாடல்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் ஒரு காட்சி.

சிம்பு ரசிகர்கள் முன்னை விட உற்சாகமாக வலம் வருகிறார்கள். ஏனெனில் தொடர் தோல்விகள், சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர்களது அபிமான நாயகன் இப்போது நம்பிக்கையுடன் பல முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். போகட்டும், சிம்பு குறித்த அண்மைய தகவல் இது. மீண்டும் சிம்பு படத்தில் அவருக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளாராம் இளைய ராஜா. சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானாகான், நீது சந்திரா ஆகி யோர் நடிக்கின்றனர். சிம்புவுக்கு இப்படத்தில் நான்கு வெவ்வேறு விதமான தோற்றங்கள் என்பது தெரிந்த சங்கதிதான்.

‘திருப்பதி சாமி குடும்பம்’

மனைவி, பிள்ளைகளுடன் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாடகை கார் ஓட்டுநரின் வாழ்வில் திடீரெனப் புயல் வீசுகிறது. அதை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கிறார் என்பதை விவரிக்க உள்ளது சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் ‘திருப்பதி சாமி குடும்பம்’. இதில் புதுமுக நாயகர்கள் இருவர் அறிமுகமாகிறார்கள். படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது.

ஜூன் 9ல் ‘மரகத நாணயம்’

ஜூன் 9ல் ‘மரகத நாணயம்’

‘மரகத நாணயம்’ திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியுள்ளார். ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளதாம் இப்படம்.

விக்ரமைப் புகழும் ஸ்ரீ பிரியங்கா

ஸ்ரீபிரியங்கா

தமிழ்த் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஸ்ரீபிரியங்காவும் ஒருவர். இவர் அச்சு அசல் தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரம் நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீபிரியங்கா. இதில் இவருக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். அது மட்டுமல்ல, அண்மைய சில தினங்களாகத் தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் விக்ரம் புராணத்தையே பாடிக்கொண்டிருக்கிறாராம். விக்ரமைப் போல் கலகலப்பான ஒரு கதாநாயகனைப் பார்க்கவே முடியாது என்பது பிரியங்கா அளிக்கும் நற்சான்றிதழ். “இந்தப் படத்தில் தமன்னாதான் கதாநாயகி. அவருடன் இணைந்து நடிப்பதை நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன்.

விஜய்யின் ஐரோப்பிய படப்பிடிப்பு முடிந்தது

விஜய் நடிக்கும் 61ஆவது படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. ஐரோப்பாவில் நடந்து வந்த அப்படத் தின் படப்பிடிப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளாராம் இயக்குநர் அட்லி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின் றனர். கடந்த சில நாட்களாக ஐரோப்பா நாடுகளில் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சி களைப் படமாக்கி வந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடி வுக்கு வந்துள்ளது. இனி ஜூன் முதல் வாரத்தில் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சென் னையில் படமாக்க உள்ளனராம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆசிரமம் நடத்துவதே என் எதிர்காலத் திட்டம்: தன்‌ஷிகா

தன்‌ஷிகா

“சினிமாவுக்காக படிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டேன். இப்போது சினிமாவில் மட்டுமே முழுக் கவனமும் குவிந்துள்ளது. எப்போதுமே கொடுத்த வேலையை சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்பது எனது கொள்கை. அதை தொடர்ந்து, உறுதியாகக் கடைபிடிக்கிறேன். மற்ற நடிகைகளைப் போலவே தமக்கு யாரிடமும் காதல் இல்லை, திருமணம் குறித்து இன்னும் யோசிக்கவே இல்லை என்றுதான் தன்‌ஷிகாவும் சொல்கிறார். அதேசமயம், அவர் கூறும் சில விவரங்கள் உண்மையானவை. அவை, இந்த இளம் நாயகி மீதான மரியாதையை, மதிப்பை அதிகப்படுத்துகிறது.

மலேசியாவில் உருவாகும் ‘கில்லி பம்பரம் கோலி’

மலேசியாவில் உருவாகும் ‘கில்லி பம்பரம் கோலி’

அறிமுக இயக்குநர் மனோகரன் இயக்கத்தில் உருவாகும் ‘கில்லி பம்பரம் கோலி’. புதுமுகங்கள் தமிழ், பிரசாத், நரேஷ் என மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும், தீப்தி ஷெட்டி என்ற புதுமுகம் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகி இருந்தாலும் இப்படத்தில் பெயரளவுக்குக் கூட காதல் கிடையாதாம். இப்படம் நட்பையும், வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டத்தையும் மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். “தமிழ் மண்ணுக்கே உரிய விளையாட்டுக்களான கில்லி, பம்பரம், கோலி ஆகியவற்றின் பெருமையைப் பறைசாற்றும். அதனால் இளையர்களை நிச்சயம் கவரும்,” என்கிறார் இயக்குநர் மனோகரன்.

ஜோதிகா நடித்துள்ள படத்தில் ஒரு பாடலைப் பாடிய கார்த்தி

கார்த்தி

தனது அண்ணியும் நடிகையுமான ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட் டும்’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் நடிகர் கார்த்தி. ஜிப்ரான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ‘அடி வாடி திமிரா புலியோட்டும் மொறமா’ என்கிற உமாதேவியின் வரிகளை கோல்டு தேவராஜ் பாடி இருக்கிறார். இயக்குநர் பிரம்மா எழுதிய ‘கருகருன்னு சுருட்டமுடி வளத்தி ருந்தாண்டி கரண்டுக்கம்பி’ பாடலை தேவராஜ், பானுப்ரியா, நமீதாபாபு பாடியிருக்கிறார்கள். இந்நிலையில், விவேக் எழுதியுள்ள ‘குபு குபு’ என்ற பாடலை ரொம்ப இயல்பாகப் பாடியிருக்கிறாராம் கார்த்தி.

நாயகி வேடம்: நமீதா மகிழ்ச்சி

நமீதா

நமீதா திடீரென உடல் இளைத்து, கட்டுக் கோப்பான உடல்வாகுடன் வலம் வருவது கோடம்பாக்க புள்ளிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. எனினும் அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமைய வில்லை. ‘பொட்டு’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, தற்போது அவருக் குப் புதிய வாய்ப்புகள் கிடைத் துள்ளன. அதுமட்டுமல்ல, நீண்ட இடைவெளிக்குப் பின் னர் மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறாராம். அப்படியா சேதி? என்று விசாரித்தால், வாயெல்லாம் பல்லாக நமீதாவின் சிரிப்பு கிறங்க டிக்கிறது.

Pages