You are here

திரைச்செய்தி

60 வயது இயக்குநர் 30 வயது நாயகியை மணந்தார்

 படம்: தமிழகத் தகவல் சாதனம்

இயக்குநர் வேலு பிரபாகரன் தன்னை விட 30 வயது குறைவான நடிகை ஷெர்லி தாஸை திடீர் திருமணம் செய்துகொண்டார். ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘அதிசய மனி தன்’, ‘காதல் அரங்கம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். நடிகர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளருமான இவர் இயக்கிய ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியீடு கண்டது. இந்நிலையில் இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் நேற்று ஜூன் 3ஆம் தேதி காலை 10.25 மணியளவில் நடைபெற்றது.

‘உடல் வலி, வேதனைகளை வெளியில் சொல்வதில்லை’

அனுஷ்கா

எனக்கும் உடல் வலி, மன வேதனை எல்லாம் ஏராளம் உள்ளது. அதை எல்லாம் வெளியில் நான் சொல்வதே இல்லை என்று கூறியுள்ளார் அனுஷ்கா. “ஒரு நடிகை என்றால் எல்லோருக்கும் ரொம்ப இளக்காரமாகி விடுகிறது. ‘அவளுக்கென்ன நிறைய பணம் பெட்டி பெட்டியாய் வருகிறது. சொகுசான வாழ்க்கை வாழ்கிறாள்’ எனச் சாதாரணமாக நினைக்கிறார்கள். அவர்கள் படும் வலியும் வேதனை யும் அவரவர்களுக்குத்தானே தெரியும்,” என்கிறார் பாகுபலி நாயகி அனுஷ்கா. “சினிமாவில் அறிமுகமானபோது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில்தான் நடிப்பேன் என்ற லட்சியம், ஆசை எதுவும் எனக்கு இல்லை.

சமந்தா: உங்கள் ரசிகன் என்று கூறிக் கொள்வது அசிங்கமாக உள்ளது

சமந்தா

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை புகைப் படத்தை வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, படத்தின் கீழ் “சிறிய விடுமுறை கொண்டாட்டம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். “உங்கள் ரசிகனாக இருப்பது எனக்கு அசிங்கமாக இருக்கிறது,” என்று ஒருவர் கூறியுள்ளார். “நல்ல குடும்ப வாழ்க்கை வாய்த் துள்ளது. இதைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம். புகைப்படத்தை நீக்கிவிடுங்கள்,” என கூறியுள்ளார்

சாவித்திரி போல் மாற பருமனாகும் கீர்த்தி

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்துக்காக அனுஷ் காவைப் போல் கீர்த்தி சுரே‌ஷின் உடல் எடையையும் அதிகரிக்க திரையுலகினர் முயன்று வருகின்றனர். நடிகையர் திலகமான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும் சமந்தா நடிகை ஜமுனா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சித்தார்த்: உணவில் தலையிடாதீர்கள்

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற் குத் தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் மக்களின் உண வைப் பறிக்காமல் அரசு மக்களுக்கு உணவளிப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. நடிகர் சித்தார்த்தும் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப் பட்ட விருப்பங்களில் தலையிடாதீர் கள். நம்மில் பலர் ‘பக்தாஸ்’ அல்ல. நாம் வெறும் இந்தியர்கள். வாழு, வாழவிடு. வெறுப்பை நிறுத்துங்கள்,” எனக் கூறியுள்ளார். இதேபோல் அரவிந்த்சாமியும் பதிவிட்டுள்ளார்.

ரகுல்: முத்தத்திற்கு தயார்

கவர்ச்சி நடிகை ரகுல் பிரீத் சிங்

தன்னுடன் நடிக்கும் நாயகனுடன் முத்தக்காட்சியில் இணைந்து நடிக்கத் தான் தயார் என்று கவர்ச்சி நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’, கார்த்தியுடன் இணைந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களிலும் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். ‘சிம்லா மிர்சி’ என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். “படத்தில் என்னுடைய பாத்திரத்துக்கும் கதைக்கும் அதிக கவர்ச்சி தேவைப்படாதபொழுது நான் ஒரு போதும் கவர்ச்சியாக நடிப்பதில்லை. அதேபோலத்தான் முத்தக்காட்சியிலும் அவசியம் என்றபோது மட்டுமே நான் நடிக்கிறேன்.

சேதுபதி போனார்; அமீர் வந்தார்

இப்போதெல்லாம் யார், யார் எந்தப் படத்தில் எத்ததகைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதை அவ்வளவு சுலபத்தில் முடிவு செய்துவிடுவதற்கில்லை. ஏனெனில் தினந்தோறும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படித்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகரும் இயக்குநருமான அமீர் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

‘ஸ்கெட்ச்’ படத்தை செப்டம்பரில் வெளியீடு செய்ய முயற்சி

‘ஸ்கெட்ச்’ படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இதையடுத்து செப்டம்பரில் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை, புதுவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. விரைவில் சென்னையில் அரங்கம் அமைத்து பாடல் ஒன்றை படமாக்க உள்ளனராம்.

‘எதற்கும் அஞ்சப் போவதில்லை’

‘துப்பறிவாளன்’ படத்தின் ஒரு காட்சியில் விஷால்.

இப்போதெல்லாம் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அங்கே காரசாரமாக ஏதாவது விவாதிப்பதும் பேசுவதும் விஷாலுக்கு வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான பிறகு கோபத் துக்கு மத்தியில் பொறுப்பாகவும் அக்கறையுடனும் அவர் பேசுவதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் அண்மைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதிப் பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று ஆவேசமாகக் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட விவகா ரத்தை மையப்படுத்தி புதிய படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை வெளி யிடும் நிகழ்வுதான் அது.

கும்ளே, கோஹ்லி விரிசலைத் தணிக்க நிர்வாகிகள் முயற்சி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கும்ளேவின் பதவிக் காலம் வெற்றியாளர் கிண்ணப் போட்டி யுடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பயிற்றுவிப்பாளர் கும்ளே, அணித் தலைவர் விராத் கோஹ்லி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாகவே புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதாகச் செய்திகள் வெளியாயின.

Pages