You are here

திரைச்செய்தி

சினேகன்: பாசத்தின் வெளிப்பாடு கண்ணீர்

தனது தந்தையுடன் திரைப்பட பாடலாசிரியர் சினேகன்.

பாசத்தைக் கண்ணீரின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும் என திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண் டாம் இடத்தைப் பிடித்துள்ள அவர், அந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்பின் வெளிப்பாடாகவே பிறரைத் தாம் அரவணைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். “சினேகன் கட்டிப் பிடிப்பதற் காகவே உள்ளே சென்றிருக்கிறான் என்று சொன்னீர்கள். ஒன்று தெரியுமா-? ஒரு பெண்ணைத் தொடுவதற்குக் கூட, அந்தப் பெண் நம் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப் போதுதான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிட முடியாது நண்பர்களே.

‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’

‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’

எம்.ஏ.பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. இந்திய ராணுவத்தில் சிறப்புப் பிரிவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் இவர். இப்படத்தில் கதை நாயகர்களாக தீபக், பிளாக் பாண்டி, ஜெய்சிந்த் ஆகியோரும் நாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோரும் நடித்துள்ளனர். “பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இப்படத்தில் தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறார் கார்த்திகேயன். அவரது வாழ்க்கையில் ஒரு நாள் நேரும் விபரீதமான நிகழ்வுகளை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறோம்.

‘அடங்காதே’ படக்குழுவில் இணைந்த சீமான்

‘அடங்காதே’ படப்பிடிப்பின்போது ஜி.வி.பிரகாஷ், சீமான்.

‘அடங்காதே’ என்ற தலைப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜி.வி.பிரகா‌ஷுடன் இணைந்து நடிக்கிறார் சீமான். அறிமுக இயக்குநர் சண்முகம் முத்து சுவாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது இப்படம். சென்னை, வாரணாசி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். தற்போது இறுதிக்கட்ட காட்சி களைப் படமாக்கி வருகின்றனர். எம்.எஸ்.சரவணன் இப் படத்தைத் தயாரிக்கிறார். சரத் குமார், மந்திரா பேடி, சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள் ளனர்.

சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா

அதர்வா

சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘தர்மதுரை’யின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க இருந்தார் சீனு ராமசாமி. அந்தப் படத்துக்கு ‘மா மனிதன்’ என்று தலைப்பும் வைக்கப்பட்டது. எனினும் சில காரணங்களால் அப்படத்தின் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே விஜய் சேதுபதியும் சில புதிய படங்களுக்கு கால்‌ஷீட் ஒதுக்கிவிட்டார். டங்களுக்கு கால்‌ஷீட் ஒதுக்கிவிட்டார். இந்நிலையில் அதர்வாவை வைத்து சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலா அழகிய அகல் விளக்கு

‘திருட்டுப்பயலே’ தமிழ்த் திரை ரசிகர்களால் மறக்க இயலாத ஒரு படம். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதையும் சுசி கணேசன் தான் இயக்குகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். “இது ஒரு போலிஸ் கதை. ‘வால்டர் வெற்றிவேல்’, ‘சாமி’, ‘சிங்கம்’ எனப் பல படங்கள் வந்துவிட்டன. இது என் பார்வையில் ஒரு போலிஸ் கதை,” என்கிறார் சுசி கணேசன். படத்தில் எந்தவிதமான நீதி போதனையும் கிடையாதாம். சுசியால் சினிமாவுக்கு அறிமுகமான பிரசன்னாவுக்கும் படத்தில் குறிப்பிடத்தக்க வேடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுசி கணேசனும் துப்பறிவாளராக வருவாராம்.

‘வத்திகுச்சி’ திலீபன் நடிக்கும் ‘குத்தூசி’

திலீபன், அறிமுக நடிகை அமலா

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல கருத்தை முன்வைக்கும் படமாக உருவாகி இருக்கிறது ‘குத்தூசி’. ஸ்ரீ லட்சுமி ஸ்டூடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ளார். ‘வத்திகுச்சி’ திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். “இதுவரை தமிழ்ச் சினிமாவில் விவசாயம் சார்ந்த ஏராளமான படங்களைப் பார்த்திருப்போம். ஆனால் முதன்முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்பவேண்டும் என்பதைக் கூறும் படமாகவும் இது உருவாகியுள்ளது,” என்கிறார் இயக்குநர் சிவசக்தி.

‘செல்சியின் தோல்விக்கு சோர்வுதான் காரணம்’

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் செல்சியை 1-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது. ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் டி பிராய்ன் போட்ட கோல் சிட்டிக்கு மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் 19 புள்ளிகளுடன் சிட்டி முன்னிலை வகிக்கிறது. செல்சி 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், செல்சியின் தோல்விக்குச் சோர்வுதான் காரணம் என்று அதன் நிர்வாகி அண்டோனியோ கோன்ட்டே தெரிவித்துள்ளார்.

மூன்று நாயகிகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொட்டு’

பரத் நாயகனாகவும் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகி களாகவும் நடிக்கும் படம் ‘பொட்டு’. இதில் பில்லி சூனியம் தெரிந்த அகோரியாக நமீதாவும் மலைவாசிப் பெண்ணாக இனியாவும் மருத்துவக் கல்லூரி மாணவியாக சிருஷ்டியும் நடித்துள்ளனர். பேய்க் கதையை மைய மாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம். ‘பொட்டு’ மிக விரைவில் திரை காண உள்ளது.

கடல் பயணத்தை விரும்பும் பார்வதி

கடல் பயணத்தை விரும்பும் பார்வதி

கடல் பயணம் என்றால் பார்வதி நாயருக்கு கொள்ளைப் பிரியமாம். நீண்ட கடற்கரையில் நன்கு காற்று வாங்கிக் கொண்டு படுத்துக்கிடப்பதில் கிடைக்கும் சுகமே அலாதியானது என்கிறார். தென்னிந்திய மொழிப் படங்களில் பார்வதிக்கு ஓரளவு வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவற்றுள் ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது.

இயக்கத்தைவிட நடிப்பே பிடிக்கும் - எஸ்.ஜே.சூர்யா

வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மனிதர் இதிலும் சோடை போகவில்லை. பல மொழிகளில் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க பலரும் அணுகி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’, செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’, அஸ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’ உள்ளிட்ட படங்களின் மூலமாக மீண்டும் திரையுலகில் தனது அடுத்த சுற்றைத் தொடங்கி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

Pages