You are here

திரைச்செய்தி

மீண்டும் இணையும் கார்த்தி, ரகுல் அண்மைக்காலமாக ரகுல் பிரீத்

சிங்கின் காட்டில் சரியான வாய்ப்பு மழை. முன்னணி நாயகர்களின் படங்களில் வரிசையாக ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள அவர், மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளாராம். இயக்குநர் கண்ணனிடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராஜத். இவர் இயக்கும் படத்தில்தான் கார்த்தியும் ரகுல் பிரீத்தும் மீண்டும் இணைய உள்ளனர். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தைத் தொடர்ந்து ராஜத் இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளாராம் கார்த்தி.

நம்பிக்கை தெரிவிக்கும் ரெஜினா

ரெஜினா

கவுதம் கார்த்திக்குடன் புதுப் படத்தில் ஜோடி சேர்கிறார் இளம் நாயகி ரெஜினா. இதே படத்தில்தான் கவுதம் தனது தந்தையும் நடிகருமான கார்த்திக்குடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு சதீ‌ஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். மேலும், இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “கவுதம் வேகமாக வளர்ந்து வரும் திறமைசாலி. அவருடன் இணைந்து நடிப்பது உற்சாகத்தை அளிக்கிறது. இந்தப் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன்,” என்கிறார் ரெஜினா.

சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கும் நித்யா மேனன்

நித்யா மேனன் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிக்கிறார். காஞ்சனா 2ல் சக்கைப்போடு போட்டு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நித்யா மேனன். அதில் அவர் உடற்குறையுள்ளவராகத் திறன்பட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துணிச் சலான கதாபாத்திரங்களிலும் அவர் எவ்வித தயக்கமின்றி நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு ‘முடிஞ்சா இவன புடி’, ‘இருமுகன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு அப்பாவின் மீசை, விஜய்யின் மெர்சல் படங்களில் நடிக்கிறார். நடிப்புத் தவிர பாடல், இயக்கம் ஆகியவற்றிலும் நித்யாவுக்கு ஆர்வம் உண்டு.

டாப்சி: அந்த அனுபவம் என்னை நடிகையாக நிலை நிறுத்தியுள்ளது

“என் முன்னால் புகைப்படக் கருவியை வைத்துவிட்டு நடிக்கச் சொன்னால் அவர்கள் சொல்வதுபோல் என்னால் நடிக்க முடியாது. இதனாலேயே எல்லாச் சோதனைகளிலும் தோற்றிருக்கிறேன். “ஆனாலும் என் மீது அன்பு வைத்திருந்தவர்கள் மூலம் கிடைத்த ஊக்கு விப்பு எனக்கு உதவியது. அது என்னை உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது. “அவர்கள் என்னிடம் காட்டிய அன்பைத் தொடர்ந்து பெறவேண்டும் என்பதற்காக 100 விழுக்காடு நடிப்பை வெளிப்படுத்தா விட்டாலும் சிறிது சிறிதாக நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினேன்.

நடிகையை மணக்கிறார் ஆர்.கே.சுரே‌ஷ்

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரே‌ஷ் நடிகை திவ்யாவைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். சலீம், தர்மதுரை ஆகிய படங்களின் தயாரிப்பாளரும் 'தாரை தப்பட்டை', 'மருது' ஆகிய படங்களின் வில்லன் நடிகருமான ஆர்.கே.சுரே‌ஷ் 'சுமங்கலி' தொடரில் நடிக்கும் திவ்யாவைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். திவ்யா எனது பூர்வீகமான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனக்கு அவரைப் பிடித்திருந்தது. இந்த முடிவு இரு வீட்டாரும் சேர்ந்து எடுத்தது. இது காதல் திருமணம் அல்ல. இரு வீட்டாரும் ஒன்றாகக் கலந்துபேசி எடுத்த முடிவு என்றார் ஆர்.கே.சுரே‌ஷ்.

குறும்படத்தில் திரி‌ஷா

கேரள அரசு தயாரித்த விழிப்புணர்வுக் குறும்படத்தில் திரி‌ஷா நடித்திருக்கிறார். திரி‌ஷாவின் தந்தை கிரு‌ஷ்ணன் பாலக்காட்டு மலையாளி. அம்மா உமா தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். திரி‌ஷா பிறந்ததும் பாலக்காட்டில்தான். திரி‌ஷா தற்பொழுது மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கேரள அரசும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்குத் தட்டம்மை நோய்த் தடுப்பூசி போட வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. இது அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இதில் நடிகை திரி‌ஷா நடித்துள்ளார்.

மந்திரா பேடியின் அற்புதமான பயணம்

‘அடங்காதே’ படத்தில் நடித்தது மறக்க முடியாத, அற்புதமான ஒரு பயணம் என இந்தி நடிகை மந்திரா பேடி தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதில் மந்திரா பேடிக்கு காவல்துறை அதிகாரி வேடமாம். “இந்தப் படத்துக்காக தமிழ் பேச கற்றுக் கொண்டேன். மொழியை கற்றுக்கொண்டால், நான் ஏற்கும் கதாபாத்திரத்தை திரையில் முழுமையாக வெளிப்படுத்த முடியும் எனக் கருதினேன். அதனால் தமிழ் கற்றேன். “இப்படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் ஆகியோரது உழைப்பு வீண் போகாது,” என்கிறார் மந்திரா.

‘தானா சேர்ந்த கூட்டம்’

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா சில நொடிகள் வந்துபோவாராம். அது எதற்காக என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையைக் கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுவதாகத் தகவல்.

‘தானா சேர்ந்த கூட்டம்’கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் என்கிறார் இனியா

இனியா.‘பொட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் இனியா.

படப்பிடிப்பின்போது நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் என் கிறார் நடிகை இனியா. பரத், இனியா இணைந்து நடிக்கும் படம் ‘பொட்டு’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் வடி வுடையான். “இப்படம் மருத்துவக் கல்லூரிப் பின்னணியில் பேய்ப் படமாக உருவாகி வருகிறது. நாயகனாக நடிக்கும் பரத் பல தோற்றங்களில் நடித்திருக்கிறார். என்னைத் தவிர சிருஷ்டி டாங்கேவும் இன்னொரு கதாநாயகியாக வருகிறார். நமீதாவுக்கு அகோரி வேடம். “இதில் எனக்கு மலைவாழ் இனப் பெண், நாகரிகப் பெண் என இரண்டு கதாபாத்திரங்கள். மலைவாழ் பெண் ணாக வரும் கதாபாத்திரத்துக்கு ‘பொட்டம்மாள்’ என்று பெயர்.

புதுப் படங்கள் வராது - திரையரங்க உரிமையாளர்கள்

திருட்டு விசிடி, புதுப் படங்களை இணையத்தில் வெளியிடுவது உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியின் கேளிக்கை வரியானது தங்களை நிலைகுலைய வைத்திருப் பதாகத் தயாரிப்பாளர்கள் தரப்பு தெரிவிக்கின்றது. இதையடுத்து கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Pages