You are here

திரைச்செய்தி

எதிரிகளான காஜல் அகர்வாலும் கேத்ரின் தெராசாவும்

தெலுங்கில் முன்னணி நடிகைகளான காஜல் அகர்வாலும் கேத்ரின் தெராசாவும் இணைந்து நடிக்கிறார்கள். இருவரும் இந்தப் படத்தில் போட்டி போட்டுக்கொண்டு எதிரிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் ராணா நடித்து வரும் படம் ‘நேனே ராஜூ நேனே அமைச்சர்’. இந்தப் படத்தில் ராணா இரண்டு கதாபாத்திரங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிக்கிறார். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரபாசுடன் வில்லனாக மோதிய ராணா, இந்தப் படத்திலும் பாகுபலி படத்திற்கு இணையாக அதிரடி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு ராணாவுக்குமிடையே சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன.

உண்மையைக் கூறும் ‘செம’

ஜி.வி.பிரகாஷ் குமார், நாயகியாக அர்த்தனா

இயக்குநர் பாண்டிராஜ் பாணியில் அவருடைய உதவியாளரான வள்ளிகாந்தும் கிராமம் சார்ந்த படத்தின் இயக்குநராக அறிமுக மாகவுள்ளார். ‘எங்கிட்ட மோதாதே’ இயக்குநர் ராமுவின் கல்யாண வாழ்வில் நடந்த உண்மை கதைதான் ‘செம’ படத்தின் கதை என்கிறார் வள்ளிகாந்த். “பொதுவாகவே ஒவ்வோர் ஆணுக்கும் திருமணத்துக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கி அது முடிவது வரை சாதாரண விஷயம் கிடையாது. அப்படித்தான் படத்தில் ஜி.வி.பிரகா‌ஷுக்கு மூன்று மாதத்துக்குள் திருமணம் செய்யவில்லை என்றால் அடுத்துவரும் ஆறு ஆண்டுகளுக்குத் திருமணம் நடக்காது என ஜோதிடர் சொல்லிவிடுவார். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு காரணத்தால் ஜி.வி.

47 வயதில் நண்பரை மணக்கும் ஷோபனா

ஷோபனா

நடிகை ஷோபனா தனது 47 வயதில் நண்பரை மணக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மணமகனின் பெயர் விவரங்களோ, தொழில் பற்றியோ விவரங்கள் இல்லை. 1984ஆம் ஆண்டு மலையாளப் படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்த நடிகை ஷோபனா அதன் பின்னர் பல தமிழ்ப் படங்களில் நடித்துவிட்டார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். சினிமா மட்டுமின்றி பரதநாட்டியத்திலும் ஆர்வம், திறமை கொண்ட ஷோபனா உலகம் முழுவதும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சென்னையில் ஷோபனாவிற்கு சொந்தமான பரதநாட்டியப் பள்ளி யும் உள்ளது.

தமிழில் ஹூமா குரோ‌ஷி!

 ஹூமா குரோ‌ஷி

இந்தியில் பல படங்களில் அதிரடி நடிப்பை வெளிப் படுத்தியவர் நடிகை ஹூமா குரோ‌ஷி. இவர் அஜித் நடித்த ‘பில்லா’ இரண்டாம் பாகத் திலேயே தமிழுக்கு வரவேண் டியவர். அச்சமயம் கால்‌ஷீட் இல்லாததால் தமிழுக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 161வது படத்தில் தமிழுக்கு வருகிறார். இந்தியில் அவர் சில படங்களில் முக்கியமான கதாநாயகியாக நடித்திருப்பதை முன்வைத்து ரஜினி படத்திலும் அழுத்தமான கதாநாயகியாக ஹூமா குரோ‌ஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்துகிறார் இயக்குநர் ரஞ்சித்.

மீண்டும் காதலிப்பேன் - அமலா பால்

அமலா பால்

அமலா பாலின் வாழ்க்கையில் இன்னொரு காதல், இன்னொரு திருமணம் இருக்குமா? கடினமான கேள்வி என்று நான் நினைத்தால், அமலாவின் பதில் சற்றும் தயக்கமின்றி வழந்து விழுகிறது. “நிச்சயமாக இருக்கும். நான் என்ன சந்நியாசம் வாங்கி விட்டேனா? அல்லது இமயமலையில் வசிக்கப் போகிறேனா? இன்னொரு திருமணம் இருக்கும் என் பது உறுதி. அதற்கான நேரும் வரும்போது நானே சொல்வேன். ‘விஐபி 2’ல் நடிகை கஜோலுடன் இணைந்து நடித்ததை தம் வாழ்நாளில் மறக்க முடி யாது என்கிறார் அமலா.

‘இருமுகன்’ அளித்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம்

விக்ரம்

ஏற்கெனவே இருமுகன் படத்தின் வசூல் வெற்றியால் உற்சாகத்தில் இருந்த விக்ரமுக்கு, அப்படம் இந்தியிலும் வெற்றிநடை போட்டு வரும் தகவல் கூடுதல் தெம்பளித்துள்ளது. இப்படத்தை ’இன்டர்நேஷனல் ரவுடி 2017’ என்ற தலைப்பில் இந்தியில் வெளியிட்டனர். விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்ததை விட இதன் வசூல் அபாரமாக உள்ளதாம். வட இந்தியாவில் மட்டுமல்லாமல் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளிலும் ரசிகர்களின் ஆதரவோடு வசூலைக் குவித்து வருகிறது

இணைய முறைகேடுகள்: ஆர்ஜே பாலாஜியின் யோசனை

ஆர்ஜே பாலாஜி

இப்போதெல்லாம் பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக ஆர்.ஜே. பாலாஜி பேசுவதையும் செய்வதையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ’இவன் தந்திரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வில் இவர் பேசியது திரையுகத்தினர் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அப்படியென்ன பேசினார்? “நம்மால் தொழில்நுட்பத்தை அழிக்க முடியாது; மாறாக நாமும் தொழில்நுட்பத்தோடு வளர வேண்டும். கமல் சார் இதைத்தான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார். “இணையத்தில் திரைப்படங்கள் வெளியாவது தொடர்பாக வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்து பேசினால் தீர்வு கிடைக்காது.

கீர்த்தி குறித்து இரு புகார்கள்

கீர்த்தி சுரேஷ்

‘பைரவா’ படப்பிடிப்பின்போது பலமுறை விஜய் ஒப்பனையுடன் வந்து காத்திருக்க, சுமார் ஒரு மணி நேரம் கூட தாமதமாக வந்திருக்கிறாராம். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்ட விஜய்க்கு, அப்படத் தின் விளம்பர நிகழ்வுகளின் போது கீர்த்தி காட்டிய பந்தாவை தான் பொறுக்கவே முடிய வில்லையாம். இனிமேல் அவர் விஜய்யுடன் நடிப்பாரா என்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை,” என்று தமிழக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இது போதாத குறைக்கு இன்னொரு புகாரும் கிளம்பியுள்ளது.

விரைவில் திரை காண உள்ளது - ‘ஸ்கெட்ச்’

விக்ரம், தமன்னா

விக்ரம், தமன்னா இணைந்து நடிக்கும் படம் ஸ்கெட்ச். அண்மைய சில நாட்களாக இப்படத்தின் முக்கிய காட்சிகள் பல விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வந்தன. தற்போது இதர தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன. விநியோகிப்பாளர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள் ளதாம். எனவே ‘ஸ்கெட்ச்’ மிக விரைவில் திரை காண உள்ளது. மிக அழகாக உருவாகியுள்ள இப்படம் தனக்குப் பிடித்தமான படங்களில் ஒன்று என உற்சாகத்துடன் கூறுகிறார் விக்ரம்.

காதல் திருமணத்தில் கவுதம் கார்த்திக் உறுதி

 கவுதம் கார்த்திக்

‘ரங்கூன்’ படத்தின் வெற்றி அதன் நாயகன் கவுதம் கார்த்திக்கை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தான் என்கிறார். இயக்குநர் என்பதைவிட ராஜ்குமார் தனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் எனவும் அழுத்தமாகச் சொல்கிறார். ‘ரங்கூன்’ விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது. இது அப்படக் குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கவுதம் கார்த்திக் நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Pages