You are here

திரைச்செய்தி

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் ‘மனிதன்’

உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜேக்சன்

உதயநிதி ஸ்டாலின் அர்ஷத் வர்‌ஷி வேடத்தில் நடிக்கும் புதிய படத்தில் போமன் இரானி வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடித் துள்ளார். இப்படத்தின் பெரும் பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் நடந்துவரும் போதிலும், இதுவரை இப்படத்திற்குப் பெயரிடப்பட வில்லை. இந்நிலையில் தற்போது இப் படத்திற்கு அதிகாரபூர்வமாக ‘மனிதன்’ எனப் பெயரிடப்பட் டுள்ளது.

திரிஷா, ஏமி மீது மக்கள் கோபம்

திரிஷா

திரிஷா, ஏமி மீது மக்கள் கோபம் தமிழ்ச் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இதேபோல் இந்த வருடத்தில் ‘ஐ’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தவர் ஏமி ஜாக்சன். இவர்கள் இருவரும் ஜல்லிக் கட்டை நடத்தக்கூடாது என பீட்டா அமைப்பில் கையெழுத்து போட்டுள்ளனர். இவர்களைப் போலவே விராத் கோஹ்லி, வித்யா பாலன், பிபாஷா பாசு போன்ற பல பிர பலங்களும் கையெழுத்திட்டுள்ள னர்.

இதனால், மிகவும் கோபமடைந்துள்ளனர் மக்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவருக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

2,000 துணை நடிகர்கள், 50 வாட்டசாட்டமான குதிரைகள் நடித்த காட்சி

‘என்னோடு விளையாடு’

பரத், கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள படம் ‘என்னோடு விளையாடு’. குதிரைப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி இயக்கி உள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மோசஸ் இசை அமைத்துள்ளார். சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், மைசூர் பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் இடம்பெறும் குதிரைப் பந்தயக் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக 2 ஆயிரம் துணை நடிகர்கள், 50 வாட்டசாட்டமான குதிரைகளைப் பயன்படுத்தி அக்காட்சியை எடுத்துள்ளனர். இதற்காக ஆறு கேமராக்களைப் பயன்படுத்தினராம்.

அசினுக்கு கெட்டிமேளம்

அசின்

அசின் அவரது காதலர் ராகுல் சர்மா திருமணம் குறித்து விதவிதமான தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இருவரும் அதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள். அசின் – ராகுல் சர்மா ஜோடி வருகிற 20ஆம் தேதி உறவினர்கள், நண்பர்கள் சாட்சியாக கணவன், மனைவி ஆகிறார்கள். இந்தத் திருமண விழா டெல்லியில் நடைபெறுகிறது. அங்கு உள்ள பிரபல தங்கு விடுதியில் திருமணத்துக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இரண்டு நாள் திருவிழாவாக இதை நடத்த முடிவு செய்துள்ளனர்.

காதல் நல்ல அனுபவம் - தமன்னா

நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்த நிலையில் காதல் திருமணங்கள் சிறந்தனவா? என்பதற்கு நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது என்கிறார் நடிகை தமன்னா.

வரலட்சுமி: சசிகுமார் என்னிடம் அவதிப்பட்டார்

‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமியின் ஆட்டம் பெரிதாக பேசப்படும். ஏனென்றால் இந்தப் படத்திற்காக அவர் ஆடிய ஆட்டம், அவ்வளவு சாதார ணமானது அல்லவாம். “இப்படியொரு கதையை முடிவு செய்த பாலா அதில், ‘நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று ‘பிதாமகன்’ சங்கீதாவிடம் கூறினாராம். என்னைச் சந்தித்த சங்கீதா, ‘உனக்கு இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறதா?’ என்று கேட்டார். அதன் பிறகு நான் பாலாவைச் சந்தித்தேன்.

ஷாம்: எனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்

‘குப்பி’, ‘வனயுத்தம்’, ‘காவலர் குடியி ருப்பு’ ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இப்போது ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தை இயக்கி உள்ளார். இதில் அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, புதுமுகம் அக் ஷா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். நடிகர் ஷாம் இதில் தொழிலதிபர் கதா பாத்திரத்தில் வருகிறார்.

விரைவில் வெளியீடு காண இருக்கும் ‘அரண்மனை 2’

சுந்தர்.சி. இயக்கத்தில் வெற்றி பெற்ற ‘அரண்மனை’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் சித்தார்த்த நாயகனாக நடிக்கிறார். திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா என மூன்று கதாநாயகிகள். சூரி, ராதாரவி, மனோபாலா, கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளது.

விஜய் ஜோடியாக நடிக்கும் மியா

விஜய் தற்போது தனது 59ஆவது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தனது 60ஆவது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடந்து வந்தது. இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

'எஸ் 3' படத்தில் போலிசாக வரும் சூர்யா

சூர்யா, அனுஷ்கா

ஹரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘எஸ் 3’. இப்படம் ‘சிங்கம் 1’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்களின் தொடர்ச்சி யாக உருவாகிறது. இதில் சூர்யா மீண்டும் காவல் துறை அதிகாரியாக வருகிறார். அனைத்துலகக் குற்றவாளி களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் அவர் என்னென்ன சாதித்தார் என்பதுதான் கதையாம். இந்தப் படத்தில் சூர்யாவுடன், சுருதிஹாசன், சூரி, பாடகர் கிரிஷ், ரோபோ சங்கர், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகி றார்கள்.

ஆனால், முதல் இரண்டு பாகங்களிலும் சூர்யாவுடன் நடித்த விவேக், இரண்டாம் பாகத் தில் நடித்த சந்தானம் ஆகியோர் இப்படத்தில் இடம் பெறவில்லை.

Pages