திரைச்செய்தி

‘இரவின் நிழல்’ படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் பார்த்திபன்.
தமது பார்வையாளர்களை உளவியல் நாடகங்களின் வழி மர்மமும் திகிலும் நிறைந்த கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப் படைப்பாளியான வினய் பரத்வாஜ்.
அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து அவர் கழட்டிவிடப்பட்டார். பின்னர் விக்னேஷ் சிவனின் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எடுக்கப்போவதாக அறிவித்து இருந்தது. ஆனால் லவ் டுடே படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் தன்னுடைய சம்பளத்தை 20 கோடி ரூபாய்க்கு ஏற்றியதால் ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியது. தொடர் விலகல்களால் விக்னேஷ் சிவன் நொந்து போய் இருந்த வேளையில் தற்பொழுது லியோ படத்தைத் தயாரித்த லலித்குமார் இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் நடிக்கின்றனர். ஒரே படத்தில் மூன்று இயக்குநர்களை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆளவந்தான் படம் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில், “எழிலோடும் பொழிலோடும் ‘ஆளவந்தான்’ விரைவில் வெள்ளித்திரையில்” என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில் உலகமெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
திரிஷா தற்போது கோலிவுட்டில் மீண்டும் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்களில் ‘பொன்னியின் செல்வன் 1’, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘லியோ’ ஆகிய மூன்று படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. இதன் காரணமாக அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தொடர் வெற்றிகளுக்குப் பிறகு திரிஷா தன்னுடைய சம்பளத்தை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார்.