You are here

திரைச்செய்தி

கார்த்திக்: திட்டமிடுதலே வேகத்துக்கு காரணம்

‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா.

“அமெரிக்காவில் நடந்த குறும் படங்கள் தொடர்பான நிகழ்ச் சிக்குப் போயிருந்தேன். ஒவ்வொரு குறும்படமும் அற்புதமாக இருந் தது. அவை புதுப்புதுக் கதை களைக் கூறின. இங்கேயும் அது போல போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்,” என்கிறார் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். திகில் ‘பீட்சா’ கொடுத்து, ‘ஜிகர்தண்டா’வில் வேறு உயரத்தை எட்டி, இப்போது `இறைவி’ எனப் படத்தின் தலைப் பிலேயே பொறி வைக்கிறார் மனிதர். “இறைவனோட பெண்பால்தான் `இறைவி’. நம்மைச் சுற்றி இருக் கும் பெண்களின் கதைதான் படம். எல்லா வேலைகளும் முடிந்து வெளியீடு காணத் தயாராக உள்ளது.” எஸ்.ஜே.சூர்யாவையும் நடிக்க வைத்திருக்கிறீர்களே?

நடிகர் ஆனந்தராஜ்: நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்பாதீர்

நடிகர் ஆனந்தராஜ்: நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்பாதீர்

சென்னை: தமக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான அவர், தாம் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். “சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுகவிற்காக கிராமம் தோறும் பிரசாரம் மேற்கொண்டு மக்களை விரைவில் சந்திப்பேன். கடவுள் எனக்கு நீண்ட ஆயுளைத் தருவார் என நம்புகிறேன்,” என்று நடிகர் ஆனந்தராஜ் அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குநர்களை ஓரம்கட்டாமல் நம்பிக்கையோடு வரவேற்கும் மாதவன்

லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படத்திற்கு பிறகு தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து வந்தார் மாதவன். அதை யடுத்து, ‘துரோகி’ பட இயக்குநர் சுதா சொன்ன ‘இறுதிச்சுற்று’ கதையில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ஒரு இந்திப் படத்தில் நடிப்பதற்காகச் சென்று விட்டார். அதனால் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் படம் திரைக்கு வந்தது. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான அந்தப் படம் எதிர்பாராத பெரிய வெற்றி பெற்றது.

இரு அழகிகளுடன் விஜய் சேதுபதி

‘நானும் ரவுடிதான்’ வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி ஜோடி மீண்டும் இணைகிறது. விக்னேஷ் சிவன் படமென்றால் கதாநாயகி நயனாகத்தானே இருக்கும். ஆம், அந்த ஒரு அழகி நயன்தாராதான். ஆனால், மற்றொரு அழகி யார் தெரியுமா? ஆம், திரிஷாவேதான். இதற்கே ஆச்சர்யப்படவேண்டாம். படத்தின் தலைப்பு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. எப்படிப்பா விஜய் சேதுபதிக்கு இப்படியெல்லாம் படம் அமையுது என்று மற்ற நாயகன்கள் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளும் அளவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படத்தில் வரிசை கட்டி நிற்கும் நிலையில், இப்படத் தின் கூட்டணி மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீர்த்தி கனவு நனவானது

கீர்த்தியின் அம்மா மேனகா (இடம்)

தான் ஒரு டாக்டராக எப்படியெல் லாம் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று கனவு கண்டு வந்தாரோ அதையெல்லாம் இப்போது தான் நடித்துவரும் ‘ரெமோ’ படத்தில் நடித்து நிஜ மாக்கிக்கொண்டு வருகிறார் கீர்த்தி. ஆக, ஏதோவொரு வகை யில் எனது டாக்டர் கனவு நன வாகிவிட்டது போன்ற மகிழ்ச் சியை இந்த ‘ரெமோ’ படம் கொடுத்துள்ளது என்று கூறு கிறார் கீர்த்தி சுரேஷ்.

தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’

தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’

ஜீவா நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் ‘போக்கிரி ராஜா’. இதில் ஜீவாவுடன் சிபிராஜ், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘புலி’ படத்தைத் தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இப்படம் வெளியாக இருக்கிறது.

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அபிநயா

அபிநயா

சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மாற்றுத் திறனாளியான இவர் தற்போது ‘அடிடா மேளம்’ என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநரும் கின்னஸ் சாதனையாளருமான ரூபம் சர்மா இயக்கவுள்ள ‘தி லிட்டில் ஃபிங்கர்’ என்ற ஆங்கிலப் படத்தில் மொத்தம் 56 மாற்றுத் திறனாளிகள் நடிக்க உள்ளதாகவும் அவர்களில் தனது மகளும் ஒருவர் என்றும் அபிநயாவின் தந்தை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கவலையில் மூழ்கிய அஞ்சலி

அஞ்சலி

நடிகர் விமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படம் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்து அதிர வைத்துள்ளது. இதன் மூலம் தனது எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதாகப் புலம்புகிறார் விமல். புதுமுகம் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம் ‘மாப்ள சிங்கம்.’ கடந்த 2014ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள்.

41 வயதில் பிரீத்திக்குத் திருமணம்

பிரீத்தி ஜிந்தா

பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிரே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் ஒரு பங்குதாரராகவும் விளங்கினார். சில ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிரிக்கெட், நண்பர்களுடன் ஜாலியாக உலகம் சுற்றுவது எனப் பொழுதைப் போக்கிவந்த பிரீத்தி ஜிந்தா, இப்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார்.

மார்ச் 25ஆம் தேதி வெளியாகிறது ‘ஜீரோ’

 அஸ்வினுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ ‌ஷிவேதா

‘மங்காத்தா’ புகழ் அஸ்வின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஜீரோ’. இதில் அஸ்வினுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ ‌ஷிவேதா நடித்துள்ளார். மேலும் ஜே.டி.சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ‌ஷிவ் மோஹா என்பவர் இயக்கியிருக்கிறார். தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் உருவான பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கின்றனர். மார்ச் 25ஆம் தேதி வெளியாகும்.

Pages