திரைச்செய்தி

திரிஷா, “ஆழ்ந்த இரங்கல் கேப்டன். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்கிறேன்.
சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகனாய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தனாய், மனம் கவர் நாயகனாய், மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவனாய் உருவெடுத்த ‘கேப்டன்’ விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனியொருவனாக திரைத்துறையில் சாதனை புரிந்த விஜயகாந்த் நேற்று காலமானார்.
வளரும் கலைஞர்களுக்கு உதவி
ஆரம்பத்தில் இவரது கறுப்பு நிறம் கலையுலகில் சிலரால் விமர்சிக்கப்பட்டு பின் கரடு முரடான பாதைகள் பல கடந்து, கடின உழைப்பிற்குப் பின் கலையுலகில் நிலையான இடம்பிடித்து, மலையளவு உச்சம் தொட்ட மதுரை மண்ணின் பெருமை மிகு அடையாளமாக பார்க்கப்படும் விஜயகாந்த், தான் அனுபவித்த வலியும், சிரமங்களும் வேறு எந்த ஒரு வளரும் திரைக்கலைஞருக்கும் நேராத வண்ணம் உதவிக்கரம் நீட்டி, பல திரைப்படக் கல்லூரி மாணவர்களை இயக்குநர்களாக்கினார்.
நடிகர் விஜயகாந்த் 1980ல் வெளிவந்த ‘தூரத்து இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தைத் தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார்.