You are here

திரைச்செய்தி

நீலிமா: சாபம் விட்டுப் பாராட்டினார் சுசீந்திரன்

நீலிமா

சின்னத்திரை, வண்ணத்திரை இரண்டிலும் நன்கு அறிமுகமானவர் நீலிமா ராணி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, இன்றைக்குப் பல்வேறு பாத்திரங்களில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நீலிமா.

தமிழ்ச் சினிமா உங்களை நாயகியாக அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா? “இல்லை. நான் நடிக்க வரவேண்டும் என்றே முதலில் நினைக்கவில்லை. அதேபோல் நடிக்க வந்த பிறகு நாயகியாக நடிக்கவேண்டும் என்றும் நினைக்கவில்லை. இப்போது நாயகியாக நடிக்கும் தகுதியை எல்லாம் தாண்டிவிட்டதையும் நான் அறிவேன்.

கவுண்டமணி: நிம்மதியாக வாழவிடுங்கள்

கவுண்டமணி

75 வயதுக்கு பிறகு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் கவுண்டமணிக்கு கிடையாது. ஆனால், அப்படியிருந்தவரை ‘49ஓ’ படத் தில் நடிக்கவைக்க சில வருடங்களாக இயக்குநர்கள் துரத்திய பிறகுதான் அப்படத்தில் நடித்தார். இதன் விளைவு, அதில் நடித்த தைப் பார்த்து ‘வாய்மை’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடை யாது’ ஆகிய படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்தனர்.

‘திரிஷா என் தங்கை’

திரிஷா, ஆர்யா

திரிஷா எனக்குத்தான் தங்கையே தவிர, ராணாவுக்கு அவர் என்ன முறை என்று எனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார் ஆர்யா. மலையாளத்தில் வெளியான ‘பெங்களூர் டேஸ்’ என்ற படம் தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதை பிவிபி சினிமா நிறுவனம் தயாரிக்க, பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார். ராணா, ஆர்யா, பாபி சிம்ஹா, திவ்யா, பார்வதி, சமந்தா நடித் துள்ளனர். கோபி சுந்தர் இசை யமைக்க, கே.பி.குகன் ஒளிப் பதிவு செய்துள்ளார்.

கோடிகளை அள்ள இருக்கிறான் ‘பிச்சைக்காரன்’

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் ‘பிச்சைக்காரன்’ ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று பலர் பாராட்டுகின்றனர். விஜய் ஆண்டனியோ, “இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் சசிக்குத்தான் நன்றி சொல்வேன்,” என்று நேற்று நடைபெற்ற ‘பிச்சைக்காரன்’ பட இசை வெளியீட்டின்போது நன்றியுடன் கூறினார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. நல்ல கதை அம்சம் உள்ள படம் எனத் திரையுலகில் நல்லதொரு பேச்சும் நிலவி வருகிறது.

கானக் குயில் காஜல்

காஜல்

காஜல் கானக் குயிலாக மாறி ‘சக்கரவியூகா’ என்ற கன்னடப் படத்திற்காக ஒரு பாடல் பாடி இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் மற்றும் பலர் நடித்த ‘அழகுராஜா’ படத்தில் மேடைப் பாடகி கதாபாத்திரத்தில் நடித்தவர் காஜல் அகர்வால். அந்தப் படத்தில் சந்தானத்தின் நகைச்சுவையை விட தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார் காஜல் அகர்வால். அந்த ‘சித்ரா தேவிப்ரியா’ கதாபாத்திரத்தை இன்றும் தொலைக்காட்சியில் பார்த்தால் சிரிக்காதவர்கள் எவரும் இல்லை எனலாம்.

மூன்று பெண்களின் வாழ்க்கையை அலசும் ‘இறைவி’

விஜய் சேதுபதி.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். சேதுபதிக்கு ஜோடி அஞ்சலி. “மூன்று பெண்களின் வாழ்க்கையை அலசும் படம் இது. அவர்களது வாழ்க்கையில் வந்து போகும் மூன்று ஆண்கள் குறித்து அலசுகிறேன். கலாமினி, அஞ்சலி, பூஜா, ராதா ரவி, கருணாகரன் என எல்லோருமே என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடித்துள்ளனர்,” என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

பார்வதி: சாதி அடையாளம் வேண்டாம்

தமிழில், ‘சென்னையில் ஒருநாள்’, ‘உத்தமவில்லன்’, ‘மரியான்’ படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தனக்குப் பிடித்த வேடங்களில் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் பார்வதி உறுதியாக இருக்கிறார். இப்போது பார்வதி என்ற பெயரில் மேலும் ஒரு நடிகை நடிக்க வந்திருக்கிறார்.

ரவிகுமார்: மகிழ்ச்சியாக உள்ளது

சுதீப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ். ரவிகுமார். ‘தங்கமகன்’ படத்தில் சாந்தமான தந்தை வேடத்தில் நடித்த பிறகு பாராட்டுகள் குவிகின்றனவாம். “தந்தை வேடத்தில் நடிக்க வேண் டும் என இருமுறை என்னிடம் கேட்டுக் கொண்டார் தனுஷ்.

‘தர்மதுரை’ படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் தர்மதுரை. தமன்னா, ‌ஷிவதா என இரு நாயகிகள். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் அண்மையில் ஒருநாள் திடீரென படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துள்ளார் வைரமுத்து.

‘குடும்ப வாழ்க்கை நன்றாக அமைந்தது’

நடிகை நதியா தற்போது தெலுங் கில் ‘அஆ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 41வது படம். “நான் 1984ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தேன். அப் போது எனக்கு வயது 18. முத லில் ‘நோக்கேத்த தூரத்து கண்ணும் நட்டு’ என்ற மலை யாளப் படத்தில் நடித்தேன். “மும்பையில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கும் என் கணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் காதல் வயப்பட்டோம். நான் இஸ்லாமியப் பெண். அவர் மராட்டிய பிராமணர். மதத்தைப் பொருட்படுத்தாமல் எங்கள் பெற்றோர் காதலை ஏற்றுக்கொண்டனர்.

Pages