You are here

திரைச்செய்தி

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இதில் சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாடல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ‘ரஜினி முருகன்’ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அதில் ‘என்னம்மா’ பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டப் போது விளக்கமளித்தார் சிவா.

‘தர்மதுரை’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய பொங்கல்

பொங்கல் பண்டிகையைத் திரையுலகப் பிரமுகர்களும் விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா இணைந்து நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தின் படக்குழுவினரும் இத்தகைய கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். படப்பிடிப்பின்போது கேக் வெட்டி பொங்கலைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார் சீனு ராமசாமி.

உதயநிதி நடிக்கும் ‘ஜாலி எல்எல்பி’

உதயநிதி

ரஜினி நடித்த வெற்றிப் படங்களின் தலைப்பை இன்றைய படங்களுக்கு சூட்டுவது வாடிக்கையாகி உள்ளது. ‘படிக்காதவன்’, ‘தங்கமகன்’ என்று தனுஷ் பல ரஜினி படங்களின் பெயர்களைத் தனது படங்களுக்குத் தலைப்பாக்கி இருக்கிறார். விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’யும் கூட ரஜினி படத்தின் தலைப்புதான். இப்போது உதயநிதியும் ரஜினி படத்தின் பெயரை தன்னுடைய படத்துக்குத் தலைப்பாக்கி இருக்கிறார். இந்தியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘ஜாலி எல்எல்பி’. இது தமிழில் மறுபதிப்பாகிறது. இந்தப் படத்தில் உதயநிதி நடித்து வருகிறார்.

‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் தாதாவாக பூஜா குமார்

சிவாஜி பேரன் துஷ்யந்த் புதிதாக ஆரம்பித்துள்ள ஈஷான் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கும் முதல் படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இதில் ஜெயராம் மகன் காளிதாஸ், பிரபு, ஆஷ்னா ஜவேரி, ஊர்வசி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசை அமைக்கிறார். லட்சுமண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் அமுதேஷ்வர் இயக்குகிறார்.

இசையமைப்பாளருடன் நடிக்கும் சமந்தா

சமந்தா

நடிகை சமந்தாவை தனது ஜோடியாக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளாராம் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இவர் புதுமுக நடிகராக அறிமுகமாகவுள்ளார். இதற்காக சூர்யா நடிக்கும் ‘எஸ் 3’ படம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைக்க மறுத்து, நடிப்பதற்கான பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். புதுமுக நடிகர் என்றாலும் ஏற்கெனவே பிரபலமானவர் என்பதால் சமந்தா கால்‌ஷீட் தருவார் என்று கூறப்படுகிறது.

தணிக்கை வாரியத்தில் கமல்ஹாசன்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தைச் சீரமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவில் நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் கௌதம் கோஷ் உள்ளிட்டோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தணிக்கை வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இயக்குநர் ‌ஷியாம் பெனகல் தலைமையிலான சீரமைப்புக் குழு கடந்த 1ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வாரம் மும்பையில் வெளியிட்டார்.

கேத்ரின் தெரசா - விஷால் முத்தக்காட்சி நீக்கம்

‘கத­களி’ ப­டத்­தில் விஷா­லுடன் இணைந்து ‘மெட்­ராஸ்’ கேத்­ரின் தெரசா நடித்­துள்­ளார். காதல், செண்­டி­மென்ட், அதிரடி போன்ற காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் பொங்கலுக்கு வெளி­யா­கியுள்ளது. படம் தணிக்கைக்குச் சென்ற போது படத்தின் காட்சிகள் தணிக்கை வாரியத்தின் கண்­களை உறுத்­தின. அதை இப்­போதே கத்­தரித்து விட்டார்க­ளாம். கார­ணம், ‘கத­களி’ படத்தை தணிக்கையாளர் அலுவலகத்திற்கு அனுப்­பி­ய­போது அதில் விஷால் - கேத்­ரின் தெரசா ஆகிய இரு­வ­ரும் இதழ் பதிக்கும் முத்தம் கொடுத்­துக்­கொள்­ளும் காட்சிகளை நீக்கச் சொன்னார்­க­ளாம்.

சிறந்த படம் ‘கிருமி’

கதிர், ரேஷ்மி மேனன்.

சென்னையில் நடைபெற்ற 13-வது அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக “கிருமி’ தேர்வு செய்யப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் நடுவர்களின் சிறந்த விருதை ‘ரேடியோ பெட்டி’ படம் பெற்றது. திரைப்பட விழாவின் சிறந்த இரண்டாவது படமாகவும் அப்படம் தேர்வானது. சிறந்த நடிகைக்கான விருது ‘தனி ஒருவன்’, ‘மாயா’ படங்களில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் ‘மனிதன்’

உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜேக்சன்

உதயநிதி ஸ்டாலின் அர்ஷத் வர்‌ஷி வேடத்தில் நடிக்கும் புதிய படத்தில் போமன் இரானி வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடித் துள்ளார். இப்படத்தின் பெரும் பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் நடந்துவரும் போதிலும், இதுவரை இப்படத்திற்குப் பெயரிடப்பட வில்லை. இந்நிலையில் தற்போது இப் படத்திற்கு அதிகாரபூர்வமாக ‘மனிதன்’ எனப் பெயரிடப்பட் டுள்ளது.

திரிஷா, ஏமி மீது மக்கள் கோபம்

திரிஷா

திரிஷா, ஏமி மீது மக்கள் கோபம் தமிழ்ச் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இதேபோல் இந்த வருடத்தில் ‘ஐ’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தவர் ஏமி ஜாக்சன். இவர்கள் இருவரும் ஜல்லிக் கட்டை நடத்தக்கூடாது என பீட்டா அமைப்பில் கையெழுத்து போட்டுள்ளனர். இவர்களைப் போலவே விராத் கோஹ்லி, வித்யா பாலன், பிபாஷா பாசு போன்ற பல பிர பலங்களும் கையெழுத்திட்டுள்ள னர்.

இதனால், மிகவும் கோபமடைந்துள்ளனர் மக்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவருக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Pages