You are here

திரைச்செய்தி

அன்பையே தேர்ந்தெடுங்கள் - சிம்பு

சிம்பு

அன்பாகச் சொல்லிப் பார்த்தார், பிறகு சீறினார், கடைசியாக எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் சிம்புவின் முயற்சிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து அதிரடியாக ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார் அவர். வேறொன்றுமில்லை... அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளி யேறுவதாக அவர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் எதிர்மறை எண்ணங்கள் பரவிவருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. சர்ச்சைகளில் சிக்குவது சிம்புவுக்குப் புதிதல்ல. எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், அவற்றுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்.

படப்பிடிப்பு முடிந்தது; நவம்பரில் வெளியாகும் ‘ஸ்கெட்ச்’

‘ஸ்கெட்ச்’ படத்தில் இடம்பெறும் காட்சியில் விக்ரம், தமன்னா.

விக்ரம் நடிப்பில் வெளியான அண்மைய படங்களின் வசூல் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ மிக சுவாரசி யமாக உருவாக்கப்பட்டு இருப்பதாகத் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத் துள்ளது. இந்தப் படம் விக்ரம் ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் எனப் படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக வித்யா பாலன்

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை வித்யாபாலன். இந்தப் பொறுப்பை ஏற்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு நடிகை என்ற வகையில் இந்தியத் திரையுலகை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல பாடுபடுவதே தமது குறிக்கோள் என்றும் வித்யா கூறியுள்ளார். தற்போது ‘தும்ஹாரிசுலு’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தணிக்கைக் குழு உறுப்பினர் என்ற முறையில் தமது பொறுப்புகளைத் திறமையாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் - சுவேதா மேனன்

சுவேதா மேனன்

திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மலையாள நடிகைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அங்குள்ள முன்னணி நடிகைகளும் வேறு சில அமைப்புகளைச் சேர்ந்த பெண்களும் இணைந்து, புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பெண்களைப் பாதுகாக்கவும் பாதிக்கப்படும் பெண்களுக்குக் குரல் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். ஆனால் நடிகைகள் சுவேதா மேனன், லட்சுமி பிரியா உள்ளிட்ட சிலர் இந்த அமைப்பில் சேரவில்லை என்பதுடன் இப்படி ஒரு அமைப்பே தேவையில்லை எனவும் கூறியுள்ளனர். “எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவை இல்லை. என் பாதுகாப்பை நானே உறுதி செய்து கொள்வேன்.

சதி செய்தார்: மஞ்சுவைச் சாடும் திலீப்

நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமது முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரின் சதியால் தாம் சிக்கியுள்ளதாக மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் பிணை கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்றும் அதில் பங்கேற்ற மஞ்சுவாரியார் தன்னை இந்தக் குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் கருத்துகளை தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். “இந்தச் சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்தது. அதில், நான் மாட்டிக்கொண்டேன்.

ஓவியாவுக்குப் பதிலாக பார்வதி நாயர்

பார்வதி நாயர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு ‘சீதக்காதி’ எனப் பெயர் வைத்துள்ளனர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பிறகு பாலாஜி தரணீதரன் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசனும் காயத்ரியும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது நாயகியாக தற்போது பார்வதி நாயரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் ‘பிக்பாஸ்’ புகழ் ஓவியா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அவரால் நடிக்க முடியவில்லையாம். இதையடுத்து பார்வதி நாயர் உள்ளே நுழைந்திருக்கிறார். கதைப்படி மூன்று நாயகிகளுமே சினிமா நடிகைகளாக நடிக்கின்றனராம்.

சூரி: என் தந்தை நகைச்சுவை மன்னன்

சூரி

திரையுலகுக்கு வந்த புதிதில் கடும் பசி, பட்டினியால் அவதிப் பட்டதாகக் கூறியுள்ளார் நடிகர் சூரி. தற்போது நிறைய சம்பாதித் தாலும் விரும்பிய அனைத்தையும் சாப்பிட முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். “ஒரு நடிகருக்கு உடல் கட்டுக்கோப்பாக இருப்பது முக்கியம். அப்போதுதான் 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவை மூலம் உடலைக் கட் டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். நயன்தாரா உள்ளிட்ட முன் னணி நடிகைகளுடன் டூயட் பாட வேண்டும் என விரும்புகிறாராம் சூரி. அவர்கள் சம்மதித்தால் தானும் நடிக்கத் தயார் என்கிறார்.

ரசிகர்கள் விருப்பம்; தனுஷ் விளக்கம்

தனுஷ்.

‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ். இதையடுத்து ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாற்றினார் தனுஷ். அப்போது ‘புதுப்பேட்டை’ தன் மனதை ஈர்த்த படங்களில் ஒன்று எனத் தெரிவித்தார். “அந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமானதும்கூட. அப்படம் தான் என்னை ஒரு நடிகனாக முன்னேற்றியது. அதுவும் எனது சகோதரர் செல்வராகவன் இல்லாமல் நடந்திருக்காது. “காலத்தைக் கடந்து நிற்கும் வெற்றிப் படம் அது.

ஆண்களுக்கு நிகர் பெண்கள் - நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா

‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்குப் பாராட்டுகள் குவிக்கின்றன. இப்படத்தில் அவர் மது குடிக்கும், சிகரெட் பிடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். அவரின் துணிச்சலான இந்த நடிப்புக்குத்தான் பாராட்டு கள் குவிந்து வருகின்றன. ‘தரமணி’ படத்தில் வரும் கருத்துகள் தான் எனது கருத்தும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்வதால் ஆண்களின் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஆண்ட்ரியா.

கங்கனா: எதையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது

கங்கனா

தனக்கு எதுவும் எளிதில் கிடைத்துவிடவில்லை, எதையும் போராடித் தான் பெற வேண்டியிருந்தது என் கிறார் இந்தி நடிகை கங்கனா ரணாவத். ‘மணிகர்னிகா’ படப்பிடிப்புத் தளத்தில் கங்கனாவுக்கான வாள் சண்டைக் காட்சிகளைப் பட மாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதனால் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டியதால் அவர் சிகிச் சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் அவர் வீடு திரும்பினார்.

Pages