சிரிப்புக்கும் சிந்தனைக்கும் வேலை கொடுத்த சிகரங்கள் 2008 நிகழ்ச்சியில், வசதி குறைந்தவர்களும் நினைவில் வைக்கப்பட்டனர்.
சனிக்கிழமை மாலை சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் எஸ்.ஆர்.நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மினி என்வைரன் மெண்ட், ஜிஎம்டி நகைக்கடை ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, அவற்றின் உரிமையாளர்கள் திரு அப்துல் ஜலீல் PBM, திரு தமீம் ஆகியோர் அதிபர் சவால் நிதி 2008-க்கு $100,000-ஐ அதிபர் நாதனிடம் வழங்கினர்.